வித்தியாசமான கதைகளை எடுத்து ரசிகர்களை மகிழ்விப்பதில் பி.வி.பி. சினிமா தயாரிப்பு நிறுவனம் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது. புதுமைக்குப் பெயர் போன பி.வி.பி. சினிமா நிறுவனம், தற்போது அறிமுக இயக்குநரான இளன் இயக்கும் ‘கிரகணம்’ என்கிற திரைப்படத்தைத் தயாரிக்க உள்ளது.
தயாரிப்பாளர்களின் ஆதர்ச நாயகனான கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், புதுமுகம் நந்தினி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் மற்றும் கருணாஸ், கருணாகரன், ‘கயல்’ சந்திரன் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
முழுக்க முழுக்க இளைஞர்களை கொண்டுள்ளது ‘கிரகணம்’ படத்தின் தயாரிப்பு குழு. ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சுந்தரமூர்த்தி மிக அருமையான பாடல்களுக்கு இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். நேர்த்தியான படத்தொகுப்பு வேலைகளை மணி குமரன் மேற்கொள்கிறார். IB கார்த்திகேயன் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொள்ள, சசி குமார் நிர்வாக தயாரிப்பு பணியை மேற்கொள்ள, பிக் ப்ரின்ட் பிக்சர் சார்பில் ஷோபன் பாபு தயாரிப்புப் பணிகளை மேற்கொள்கிறார். பரம் V பொட்லூரி இப்படத்தை தயாரிக்கிறார்
படம் பற்றிப் பேசிய இயக்குநர் இளன், “கிரகணம்’ என்பதே கோள்களின் இடமாற்றம் என்று சிலரும், ஒவ்வொரு மனிதனின் நல்லதும், கெட்டதும் இதனை மையமாகக் கொண்டே அமைகிறது என்று சிலரும் நம்புவது உண்டு. அந்தவகையில் சந்திர கிரகணத்தால் சிலரது வாழ்க்கையில் ஏற்படும் நல்லது – கேட்டதை சுவாரஸ்யமாக சித்தரிக்கும் திரைப்படம்தான் இந்த ‘கிரகணம்’. பி.வி.பி. சினிமா தயாரிப்பில் என்னுடைய முதல் படத்தை இயக்குவதில் மிகவும் பெருமைப்படுகிறேன்..” என்கிறார் அறிமுக இயக்குனர் இளன்.