இயக்குநர் வெற்றி மகாலிங்கம் நடித்து, இயக்கியிருக்கும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடல்..!

இயக்குநர் வெற்றி மகாலிங்கம் நடித்து, இயக்கியிருக்கும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடல்..!

சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற ‘என்ஜாயி-என்சாமி’ வரிசையில் மறுபடியும் ஒரு கிராமத்து புகழ் பாடும் சுயாதீன பாடல் (Independent Song) வெளியாகவுள்ளது.

இந்தப் பாடலை மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக தயாரித்து, இயக்கி, நடிக்கவும் செய்திருக்கிறார் இயக்குநர் வெற்றி வீரன் மகாலிங்கம்.

இவர், அரும்பு மீசை குறும்பு பார்வை’, ‘வெண்ணிலா வீடு’, ‘விசிறி‘ஆகிய படங்களை இயக்கியவர்.

ஒளிப்பதிவு – சஞ்சய் லோகநாத், படத் தொகுப்பு – V.J.சாபு ஜோசப், பாடல்கள் – ஞானகரவேல், ஒலிக் கலவை – ராம்ஜி, நடன இயக்கம் – சுரேஷ், டிசைன்ஸ் – ஜோசப் ஜாக்சன், மக்கள் தொடர்பு – சதீஷ்(AIM).

மறைந்த  இளம் இசையமைப்பாளர் நவீன் ஷங்கரின் இசையில் பிரபல பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான ‘அந்தோனி தாசன்’ பாடிய இந்தக் ‘கிராமத்து ஆந்தம்’ பாடல் வரும் ஏப்ரல் 14 தமிழ் வருடப் பிறப்பு நாளில் ‘B S Value’ (Black sheep)  OTT தளத்தில் வெளியாக இருக்கிறது.

Our Score