ஸ்ரீசாய் பிலிம் சர்க்யூட் என்ற பட நிறுவனம் சார்பில் மனோஹரன்.D தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘கில்லி பம்பரம் கோலி.’
இந்தப் படத்தில் தமிழ், பிரசாத், நரேஷ், சந்தோஷ் குமார், தீப்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், ஜோ, கே.ஆர்.விமல், ராஜசேகரன், சுரேஷ், ஜெகன், ராஜேஸ்வரி, ஆடி, ஹரிபாபு, விஷ்ணு,ஜெ, பர்ன், ஜேம்ஸ், பாஸ்கர், சமன், குமார், கலை, அர்விந்த், பாலா, டேவிட், காளி, பிரபு, கௌரி, சுபாராவ், சங்கீதா, ஆனந்த் என்று பல புதுமுகங்களும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – நாககிருஷ்ணா, இசை – Y.R.பிரசாத், பாடல்கள் – சினேகன், டி.மனோஹரன், கலை – பழனிவேல், படத் தொகுப்பு – பி.சாய்சுரேஷ், நடனம் – தினா, தயாரிப்பு மேற்பார்வை – எம்.செந்தில், தயாரிப்பு நிர்வாகம் – வெங்கடேஷ், எழுத்து, தயாரிப்பு, இயக்கம் – டி.மனோஹரன்.
“வெளிநாட்டில் வேலை செய்யும் மூன்று இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் ஆகிய நால்வரும்வெவ்வேறு சூழ்நிலைகளில் சந்தித்து ஒருவருக்கொருவர் நண்பர்கள் ஆகிறார்கள்.
அவர்கள் நல்ல நட்புடன் பழகி வரும்போது அந்த ஊரில் உள்ள ஒரு வில்லனிடம் ஏற்படும் பிரச்னையினால் அவர்கள் அந்த ஊரை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஊரை விட்டு வெளியேறாமல் இருந்து அந்த வில்லனை அழிக்க கத்தியின்றி, ரத்தமின்றி அவர்கள் எடுக்கும் ஆயுதம்தான் இந்த ‘கில்லி, பம்பரம், கோலி’ திரைப்படம். இந்த படத்தில் காதல், டூயட் பாடல் எதுவும் இல்லாத நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
இந்தப் படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. இப்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் வெளியாக உள்ளது..” என்றார் இயக்குநர் மனோஹரன்.D









