full screen background image

“சூப்பர் ஸ்டார் டைட்டிலை நீக்கிவிடுங்கள்” – தயாரிப்பாளர் டி.சிவாவின் அறிவுரை..!

“சூப்பர் ஸ்டார் டைட்டிலை நீக்கிவிடுங்கள்” – தயாரிப்பாளர் டி.சிவாவின் அறிவுரை..!

க்ளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தேனி பாரத் டாக்டர் ஆர்.சுருளிவேல் தயாரித்துள்ள படம் ‘பேய காணோம்’.

செல்வ அன்பரசன் இயக்கியுள்ள இப்படத்தில் தற்பொழுது தேடல் நாயகியாக ஒளிந்து வாழ்ந்து வரும் மீரா மிதுன், தருண் கோபி, கெளசிக், சந்தியா ராமச்சந்திரன், விஜய் டிவி புகழ் கோதண்டம், ஜேக்கப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. HI CREATORS பட நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
படத்தின் டபுள் டிராக் ரிலீஸ் சென்னையில் நடந்தது.

விழாவில் நடப்பு தயாரிப்பாளர் சங்க செயலாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் கதிரேஷன், தயாரிப்பாளர் மதுரை செல்வம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

விழாவில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா பேசும்போது, ”இந்தப் படத்தை இயக்குநர் செல்வ அன்பரசன் காமெடியாகவும், வித்தியாசமாகவும் எடுத்திருக்கிறார் என்பது படத்தின் முன்னோட்ட காட்சிகளை பார்த்தாலே தெரிகிறது. இந்த படத்திற்கு வெளியீட்டாளர் கிடைத்திருப்பதும் மகிழ்சியான செய்தி.

தயாரிப்பாளர் சுருளிவேல் சிரிப்பிலேயே படத்தின் வெற்றி தெரிகிறது. படத்தை வாங்கியிருக்கும் HI CREATORS நிறுவனத்திற்கும் இதுபோல் லாபம் கிடைக்கும்போது உண்மையான வெற்றியாகிவிடும். தொடர்ந்து இது போன்ற படங்களை தர வேண்டும்.

படத்தின் கதாநாயகன் கெளசிக் பேசும்போது, “தயாரிப்பாளர் நல்லா சம்பாதிக்கணும்னு ஆசைப்படுறேன்” என்றார். இந்த எண்ணம் நல்ல எண்ணம்தான். ஆனால் வளரும் போதும், வளர்ந்த பிறகும் இந்த எண்ணம் தொடர்ந்தால் நல்லது.

படத்தின் டைட்டிலில் காமெடிக்காக ‘சூப்பர் ஸ்டார்’ என்று வருகிறது. அந்த பட்டம் தலைவர் ரஜினிக்கு மட்டும்தான் சொந்தம். அதனால் ஒரு ரஜினி ரசிகனாக கேட்கிறேன். அந்த டைட்டிலை மட்டும் எடுத்து விடுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறேன். மற்றபடி படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்…” என்றார்.

Our Score