full screen background image

மறு ஜென்மக் கதையில் உருவாகும் ‘கங்கா தேவி’ திரைப்படம்

மறு ஜென்மக் கதையில் உருவாகும் ‘கங்கா தேவி’ திரைப்படம்

குமரன் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.N.பூமிநாதன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கங்கா தேவி’.

இந்தப் படத்தில் யோகி பாபு, ரிஷி ரித்விக், மஹானா, நளினி, ஆர்த்தி, கணேஷ், மொட்ட ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சாய் தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – குமரன் சினிமாஸ் – K.N.பூமிநாதன், இயக்கம் – மில்கா செல்வகுமார், இசை – வித்யா சரண், ஒளிப்பதிவு – சுரேஷ், படத் தொகுப்பு – ஸ்ரீகாந்த், பாடல் – வ.கருப்பன் மதி, நடன இயக்கம் – கலா, அசோக் ராஜா, லாரன்ஸ் சிவா, கலை இயக்கம் – முத்துவேல், சண்டைப் பயிற்சி இயக்கம் – சூப்பர் சுப்பராயன், தயாரிப்பு நிர்வாகம் – ஆர். ஜி. சேகர், பத்திரிக்கை தொடர்பு – A.ஜான்.

ராகவா லாரன்ஸின் சீடரும் ‘சண்டிமுனி’ படத்தை இயக்கியவருமான மில்கா செல்வகுமார் இப்படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படம் குறித்து இயக்குநர் மில்கா செல்வகுமார் பேசும்போது, “ஆணவக் கொலையை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. ஒரு ஜமீன் குடும்பத்திற்கு மருமகளாக வரப் போகும் பெண் அந்த வீட்டிற்குள் நுழைய, அடுத்தடுத்து பல பிரச்சினைகள் நடக்கின்றன. அதற்கு காரணம் யார் என்பதும் அதை ஜமீன் குடும்பத்தினரும் அந்த பெண்ணும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாணியில் மறு ஜென்மக் கதையாக உருவாகும் இந்த ‘கங்கா தேவி’ படத்தில் ஹாரர், திரில்லிங், காமெடி என எல்லா அம்சங்களுமே கலந்து இருக்கின்றன” என்றார்.

வரும் தமிழ்ப் புத்தாண்டு பிறந்ததும் பழனி அருகே உள்ள நெய்க்காரன்பட்டியில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது.

சென்னையில் ஒரு பாடல் காட்சிக்காக மிகப் பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

இதை அடுத்து பாலக்காடு அரண்மனை, குற்றாலம், ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

Our Score