full screen background image

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்

நவீரா சினிமாஸ் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷுடன் நடிக்கவுள்ள கலைஞர்களின் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் படக் குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில், இதர நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

இயக்குநர் – டி.வி.அகிலன், தயாரிப்பு நிறுவனம் – நவீரா சினிமாஸ், தயாரிப்பாளர் – இஷானி சஜ்மி சலீம், நிர்வாக தயாரிப்பாளர் – பி.சூர்ய பிரகாஷ், இணை தயாரிப்பாளர்கள் – சாஜினாஸ் சலீம், சாதிக் சலீம், இசை – ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு – எம்.ஏ.ராஜதுரை, படத் தொகுப்பு – டி.சிவனாதீஸ்வரன், கலை இயக்கம் – தாமு, சண்டை இயக்குநர் – டேஞ்சர் மணி, ஆடை வடிவமைப்பு –  சைதன்யா ராவ், ஒப்பனை – குப்புசாமி, மக்கள் தொடர்பு –  யுவராஜ்.

பல்வேறு  முன்னணி இயக்குநர்களிடம் பணிபுரிந்துவிட்டு, சில குறும் படங்கள் மற்றும் பல்வேறு முன்னணி படங்களின் கதை விவாதத்தில் கலந்து கொண்ட அகிலன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இயக்குநர் அகிலன் கூறிய கதை ஜி.வி.பிரகாஷுக்கு மிகவும் பிடித்துவிடவே, உடனேயே படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளார். முழுக்க, முழுக்க காதலை மையப்படுத்திய இத்திரைப்படம் ஒரு க்ரைம் த்ரில்லராகவும் உருவாகவுள்ளது. இன்னும் இந்தப் படத்துக்குப் பெயரிடப்படவில்லை. ஆகையால் ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ என்று அழைக்கப்படுகிறது.

வரும் டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 55 நாட்களில் ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக் குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப் புதிய படத்தின் பூஜை நிகழ்வு சென்னை, வளசரவாக்கத்தில் இன்று காலை நடைபெற்றது. கொரோனா வைரஸ் தடு்ப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இந்தப் படத்தின் பூஜையில் அனைவரும் கலந்து கொண்டனர்.

Our Score