ரொம்ப அநியாயமா இருக்கே..? முத்தக் காட்சியில் நடிக்க ஒரு ஹீரோவுக்கு இத்தனை வெட்கமாவா இருக்கும்..? அடிச்சோமோ.. வாங்கினோமா.. போனோமான்னு இல்லாமல் 38 டேக்குகள் வாங்கி ஆண் குலத்தின் பெயரையே கெடுத்திட்டாரு ஹீரோ ஜி.வி.பிரகாஷ்குமார்.
இவர் ஹீரோவாக நடித்து வரும் படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இந்தப் படத்தில் இவருக்கு இரண்டு ஜோடிகள். மனிஷா யாதவ் மற்றும் ‘கயல்’ ஆனந்தி.
மனிஷா யாதவ், பல படங்களில் துணிகளை குறைத்து எந்த லெவலுக்கும் கவர்ச்சி காட்ட தயார் என்கிற கொள்கையிலேயே நடித்து வருகிறார். இவருடன்தான் முத்தக் காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறார் இயக்குநர்.
முதலில் மறுதலித்த ஹீரோ, பின்பு தனது காதல் மனைவியான பாடகி சைந்தவியிடம் அனுமதி பெற்றுவிட்டு நல்ல பிள்ளையாகத்தான் நடிக்க ஓகே சொன்னாராம்.
சில வினாடித் துளிகளே திரையில் காணப் போகின்ற அந்தக் காட்சியில் நடிக்க… முத்தக் கொடுக்கப் போகும் ஹீரோயினே ரிலாக்ஸாக இருக்க… நம்ம ஹீரோதான் பயந்து நடுங்கியிருக்கிறார்.
காட்சிகள் எடுக்கத் துவங்க.. டேக்குகள் போய்க் கொண்டேயிருந்திருக்கின்றன. கடைசியாக 38-வது முறையில்தான் இயக்குநருக்கே பிடித்தது போல அந்த முத்தக் காட்சி வெற்றிகரமாக அமைந்ததாம்..
38 முறையும் சளைக்காமல் முத்தம் கொடுத்த ஹீரோயின் மனிஷா யாதவை பாராட்டுவதா..? இல்லை, ஒரே டேக்கில் முடிக்க வேண்டிய ஒரு முத்த நடிப்புக் காட்சியை 38 முறை இழுத்தடித்த நம்மாளை திட்டுவதா..? கொடுமையோ கொடுமை..
அந்த முத்தக் காட்சி ஸ்டில்லை பார்த்தவுடன் இன்னமும் கொடுமையாக இருந்து. நீங்களே பார்த்துக்குங்க மக்களே..!