full screen background image

பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது.

இந்தப் படத்தில் ஜீ.வி.பிரகாஷ், ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீநாத் பாஸி, லிங்கேஷ், விஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் நடிப்பதோடு படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.

ஒளிப்பதிவு – ரூபேஷ் சாஜி, படத் தொகுப்பு – செல்வா R.K., கலை இயக்கம் – ரகு, சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், உடைகள் – சபீர், புகைப்படங்கள் – ஆர்.எஸ்.ராஜா, பத்திரிக்கை தொடர்பு – குணா.

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது. தயாரிப்பாளர் பா.இரஞ்சித் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இயக்குநர் பா.இரஞ்சித் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்காக தொடர்ந்து படங்களை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Our Score