இசையமைப்பாளராய் அறிமுகமாகி பின் நடிகராக வளர்ந்து அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்து மக்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர் நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஜி.வி.பிரகாஷ்குமார்.
‘டார்லிங்-2’, ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘பென்சில்’ என தொடர் வெற்றி படங்களை அளித்து முன்னனி நட்சத்திரமாக விளங்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது முன்னனி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் அபிமான கதாநாயகனாக திகழ்கிறார் என்றால் மிகையாகாது.
தற்போது ஜி.வி.பிரகாஷ் மிகவும் பிஸியான ஹீரோவாகியிருக்கிறார். லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘புருஷ்லீ’, ராஜேஷ் இயக்கத்தில் ‘கடவுள் இருக்கான் குமாரு’, ஷங்கர் – குணா இயக்கத்தில் ‘கெட்ட பையன் சார் இந்த கார்த்தி’, சசி இயக்கத்தில் சித்தார்த்துடன் புதிய படம், சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படம், ஸ்ரீகீரின் புரோடக்ஷன் தயாரிப்பு நிறுவனத்திற்காக ஒரு படம், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஒரு படம் என பல எதிர்பார்ப்பைக் கூட்டும் படங்களில் நடித்து வருகிறார் பிரகாஷ்குமார்.
புதுமுக இயக்குநர்கள், அறிமுக இயக்குநர்கள், புதிய தயாரிப்பு நிறுவனம், பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்தான் தற்போதைய தமிழ் திரையுலகத்தின் ‘நம்பிக்கை நாயகன்’ எனலாம்.
எம்.ஜீ.ஆர் – சரோஜா தேவி, சிவாஜி – பத்மினி, ரஜீனி – ஸ்ரீ பிரியா, கமல் – ஸ்ரீ தேவி, விஜய் – சிம்ரன், அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா என மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்ட வசூல் சாதனை ஜோடிகள் வரிசையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் – ஆனந்தி ஜோடி இணைந்துள்ளது.
இந்த ஜோடி நடித்து வசூலில் சாதனை படைத்த ‘திரிஷா இல்லனா நயன்தாரா’வை தொடர்ந்து இவர்களின் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘எனக்கு இன்னோரு பேர் இருக்கு’ படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஜூன் 17 அன்று உலகமேங்கும் கோலாகலமாக லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ‘எனக்கு இன்னோரு பேர் இருக்கு’ திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.










