full screen background image

‘டார்லிங்’ ஜி.வி.பிரகாஷ்..!

‘டார்லிங்’ ஜி.வி.பிரகாஷ்..!

ஒரு அறிமுக நடிகரின்  முதல் படம் ரிலீஸாகும்வரையிலும் அவரது அடுத்த படம் பற்றி சந்திக்கவே முடியாது.. ஆனால் பிரபலமானவர்கள் நடிக்க வரும்போது அது சாத்தியம்தான்..!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘பென்சில்’ படத்தில் ஹீரோவாக நடிக்கத் துவங்கியபோதே ஏதோ டிரை செஞ்சு பார்க்குறார் போல என்று நினைத்து முணுமுணுத்தது கோடம்பாக்கம். ஆனால் அந்த ‘பென்சில்’ படத்தின் ஷூட்டிங் முடிவடைதற்குள் ‘டார்லிங்’ என்ற இன்னொரு படத்திலும் அவர் ஹீரோவாக நடிக்கத் துவங்க.. ‘என்னடா இது கோடம்பாக்கத்துக்கு வந்த சோதனை?’ என்று முகவாய்க்கட்டையில் கை வைத்து ஆச்சரியமாக பார்க்கிறார்கள்..!

தெலுங்கில் ‘பிரேம கதா சித்ரம்’ என்ற பெயரில் வெளிவந்த படம்தான் தமிழில் ‘டார்லிங்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதுவொரு பேய்க் கதை.. தெலுங்கின் பிரபலமான தயாரிப்பாளரான அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸும், ஞானவேல்ராஜாவின் கிரீன் ஸ்டூடியோவும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. தெலுங்கில் இந்தப் படத்தை எழுதி, இயக்கிய சாம் ஆண்டனே இந்தத் தமிழ் ரீமேக்கையும் இயக்குகிறார்.

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். கருணாஸ் ஒரு கனமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்ய.. படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷே இசையமைக்கிறார்.

‘டார்லிங்’ பற்றி ஜி.வி.பிரகாஷ் என்ன சொல்கிறார்..?

‘பென்சில்’ படத்தோட ஸ்டில்ஸ் வெளில லீக் ஆனவுடனேயே அதைப் பார்த்திட்டுத்தான் இந்த ‘டார்லிங்’ படம் எனக்கு புக்காச்சு.

ஞானவேல்ராஜாகிட்ட ‘பென்சில்’ படத்தோட சில காட்சிகளை போட்டுக் காட்டினேன். அதைப் பார்த்திட்டு ‘நல்லாயிருக்கு’ன்னு சொல்லிட்டுப் போனார். போன கையோட ‘இப்படியொரு தெலுங்கு படத்தை தமிழ்ல ரீமேக் செய்யப் போறேன். நீங்கதான் இதுல நடிக்கணும்’னார்.

‘இந்த ஹீரோ கேரக்டர் உங்களுக்கு ரொம்ப ஷூட்டா இருக்கும்’னு டைரக்டரும் சொன்னாரு.. நானும் யோசிச்சேன்.. எனக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாத்தான் தோணுச்சு.. இதுவரைக்கும் மீசை, தாடியோட இருந்ததே இல்லை. லேட்டா முடி முளைச்சாலே ஷேவிங் பண்ணிருவேன்.. இந்தப் படத்துக்காக கொஞ்சம் மீசை, கொஞ்சம் தாடியோட இருந்தாகணும். சரி இருந்துதான் பார்ப்போமேன்னு ஒத்துக்கிட்டேன்..!

கூடவே இன்னொரு விஷயமும் இதுல இருக்கு. இதுவரைக்கும் காதல், ரொமான்ஸ், பீரியட் பிலிம், ஹிஸ்டாரிக்கல் பேக் டிராப்ன்னு நிறைய படங்களுக்கு மியூஸிக் போட்டுட்டேன்.. ஆனா பேய் படத்துக்கு இதுவரைக்கும் மியூஸிக் போட்டதே இல்லை. இந்தப் படம் கைக்கு சிக்கும்போதுதான் இது எனக்கு உறைச்சது.. உடனே ஒத்துக்கிட்டேன்.

மேலும் இந்தப் படம் தெலுங்கு, கன்னடத்துல எடுத்து அங்கே ஹிட்டடித்த படம். தமிழ்ல ஏதாவது எக்ஸ்பரிமெண்ட் செய்யணும்.. அதுக்கு தோதான படமா இருக்கும்னு நம்புறேன். இந்தப் படத்தோட டீஸரை பார்த்திட்டு ரஹ்மான் ஸார் என்னை பாராட்டினது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு..” என்கிறார்.

Our Score