உலக அளவில் பிரபலங்களின் பெயரைச் சொல்லியே பிரபலமாகியிருக்கும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை, இந்தியாவில் 2016-ம் ஆண்டில் புகழ் பெற்றிருந்தவர்களின் பட்டியலை இப்போது வெளியிட்டிருக்கிறது.
முதல் நூறு பேரை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை பட்டியலிட்டிருக்கிறது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் மட்டுமே இடம் பிடித்திருக்கிறார்கள்..!
13-வது இடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார்.
27-வது இடத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் இருக்கிறார்.
30-வது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி இருக்கிறார்.
46-வது இடத்தில் ஸ்ருதிஹாசன் இருக்கிறார்.
47-வது இடத்தில் தனுஷ் இருக்கிறார்.
49-வது இடத்தில் கமல்ஹாசன் இருக்கிறார்.
51-வது இடத்தில் சூர்யா இருக்கிறார்.
53-வது இடத்தில் காஜல் அகர்வால் இருக்கிறார்.
61-வது இடத்தில் விஜய் இருக்கிறார்.
72-வது இடத்தில் விக்ரம் இருக்கிறார்.
90-வது இடத்தில் பிரபுதேவா இருக்கிறார்.
இவர்களுக்கெல்லாம் நமது வாழ்த்துகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!
ஆனால் தமிழகத்தின் முக்கியமான விஐபியான ‘தல’ அஜீத்தின் பெயர் இதில் விடுபட்டுப் போனது எப்படி என்று தெரியவில்லை..!
அஜீத் எப்போதுமே தமிழகத்தில் ஹாட்டான மனிதராக, தேடப்படும் மனிதராகத்தான் இருக்கிறார். அப்படியிருந்தும் இந்தப் பட்டியலில் அவருக்கு இடம் இல்லாததை பார்த்தால், போர்ப்ஸ் பத்திரிகையின் இந்தப் பட்டியல் அறிவிப்பே கேலிக்கூத்தாகத்தான் தோன்றுகிறது..!









