ஆகஸ்ட்-1-ம் தேதி முதல் ஸ்டிரைக் – பெப்சி அமைப்பு அறிவிப்பு..!

ஆகஸ்ட்-1-ம் தேதி முதல் ஸ்டிரைக் – பெப்சி அமைப்பு அறிவிப்பு..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சமீபத்தில் எடுத்த முடிவின்படி தயாரிப்பாளரே தான் தயாரிக்கும் படத்தில் பணியாற்றும் ஊழியர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும், பெப்சி ஊழியர்கள் இல்லாமலும் திரைப்படம் தயாரிக்க அவர்களுக்கு முழு உரி்மையுண்டு என்றும் அதிரடியாக அறிவித்தது.

இதனை மறுபரீசிலனை செய்யும்படி பெப்சி அமைப்பு வேண்டுகோள்விடுத்தும் தயாரிப்பாளர் சங்கம் மறுத்துவிட்டது. எனவே, வேறு வழியில்லாமல் பெப்சி அமைப்பு திரைப்படத் தொழிலில் பெப்சி அமைப்பினரை புறக்கணித்து திரைப்படங்களை தயாரித்தால் முழு வேலை நிறுத்தம் செய்வோம் என்றும், ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி சம்பளம வழங்காவிட்டால் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாகவும் அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பையும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் புறக்கணித்துவிட்டார். திட்டமிட்டபடி தங்களது படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், எது நடந்தாலும் தாங்கள் அதை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக இன்று மாலை பெப்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை இது :

fefsi-press statement-1

press2

press3

 

Our Score