யார், யாருக்கோ போலி பெயரில் டிவிட்டரில் அக்கவுண்ட் ஆரம்பிச்சாச்சு.. இன்னும் இவர் பெயர் மட்டும்தான் பாக்கியா இருந்தது.. அதையும் ஒரு புண்ணியவான் ஆரம்பிச்சிட்டாரு..!
‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் பெயரில் DirKBalachander என்ற ஐ.டி.யில் டிவிட்டரில் திடீர் ஐடி உருவாகி நேற்று முன் தினமும், நேற்றுமாக பார்வையாளர்களின் கவனத்திற்கு வந்தது..
ஜூலை 17-ம் தேதிதான் அதனை கிரியேட் செய்திருக்கிறார்கள். அடுத்தடுத்து அதில் வெளிவந்த ட்வீட்டுகளையெல்லாம் படித்தபோது கே.பி. இப்படியெல்லாம் பேசவும், எழுதவும் மாட்டாரே என்று அவரது சுற்றுவட்டாரத்திற்குத் தெரிய வந்தது.
அதற்குள்ளாக 1473 பாலோயர்ஸ்.. அவரே 260 பேரை பாலோ செய்வதாக குறிப்பிடுகிறது.. இதுதான் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியது..
இன்று காலை ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் நேர்முக உதவியாளர் மோகனிடம் நாம் தொலைபேசியில் பேசியபோது இதனை உறுதியாக மறுத்தார். “டைரக்டர் எந்த சமூகவலைத் தளத்திலும் இல்லை.. இது அவருடைய பெயரில் இருக்கும் போலியான ஐ.டி.தான்.. அதனை யாரும் நம்ப வேண்டாம்..” என்றார்.
இதோ உங்களுக்கும் சொல்லியாச்சு..!
அமைதியான ஆட்களா பார்த்து பேக் ஐ.டி. ஓப்பன் பண்றாங்கப்பா இந்த தில்லுதுரைகள்..!