full screen background image

“அரசியலைவிட்டுட்டு சினிமாவுக்கு ஏதாவது செய்யுங்கப்பா..” – நடிகர்களுக்கு ஆர்.வி.உதயகுமார் வேண்டுகோள்..!

“அரசியலைவிட்டுட்டு சினிமாவுக்கு ஏதாவது செய்யுங்கப்பா..” – நடிகர்களுக்கு ஆர்.வி.உதயகுமார் வேண்டுகோள்..!

வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் ‘எவனும் புத்தனில்லை’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரையிலர் வெளியீட்டு விழா  இன்று காலை, சென்னை கமலா திரையரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தில் நடித்த நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், மீரா கதிரவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

meera kathiravan

இயக்குநர் மீரா கதிரவன் பேசியதாவது, “இந்த உலகத்தில் எவனும் புத்தனாக இருக்க முடியாது. அதேசமயம் எல்லாரும் மனுசனாகவும் இருக்க முடியாது. இங்கு சிறிய படம் பெரிய படம் என்றில்லை. எல்லோரும் ஒன்றுபோல்தான் உழைக்கிறோம். ஆனால் எல்லாப் படங்களுக்கும் ஒன்றுபோல் தியேட்டர்கள் கிடைக்குதா என்றால் இல்லை. மற்ற மாநிலங்களில் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. நம் தமிழ்நாட்டில் மட்டுமே மிகவும் சிக்கலாக இருக்கிறது.

இத்தனை பேர் இணைந்து இந்த ‘எவனும் புத்தனில்லை’ படத்தைத் தயாரித்திருப்பது பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் விஜயசேகரனுக்கு எனது வாழ்த்துகள். இந்த விழா இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதே இப்படத்தின் வெற்றிக்கான சாட்சியாக இருக்கிறது” என்றார்.

IMG_7129

படத்தின் இசை அமைப்பாளர் மரியா மனோகர் பேசும்போது, “என்னுடைய முதல் படம் ஜே.கே.ரித்திஷ் சார் நடிச்ச ‘நாயகன்’ படம்தான். பணம் என்பது எனக்கு எப்போதுமே இரண்டாம்பட்சம்தான். இசை எனக்குப் பேஷன்.  நல்லவனாக இருப்பதாலயே நிறைய படங்களில் நிராகரிக்கப்பட்டிருக்கேன்.

இந்த டைட்டிலே எல்லோரையும் ஈர்க்கக் கூடியது. இந்த உலகத்தில் எல்லோருமே அயோக்கியர்கள்தான். ஏனென்றால் யாராலும் நூறு சதவிகிதம் நல்லவனாக இருக்கவே முடியாது. காலத்தின் கட்டாயத்தால்தான் அப்படி மாறுகிறோம். அதனாலேயே எவனும் புத்தனில்லை என்ற டைட்டில் எனக்கு மிகவும் பிடித்துப் போனது…” என்றார்.

IMG_7339

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது, “என்னை அழைக்கிற விழாக்களுக்கு நான் தவறாமல் செல்வேன். அதுவும் சிறிய பட விழா என்றால் மறுக்காமல் செல்வேன்.

இதுவரையிலும் படத் தயாரிப்புக்காக நான் மூன்றே கால் கோடி ரூபாயை இழந்திருக்கேன். ஆனால் இன்னும் இந்த சினிமா மீது ஆர்வமாக இருக்கிறேன்.

எவனாலும் புத்தனாக இருக்க முடியாது. எம்.ஜி.ஆர் போல ஒருவன் இனிமேல் வரவே முடியாது. புத்தனாக இருக்க வேண்டாம். மனிதனாக இருந்தாலே போதும். இங்கு அரசியல் துரோகிகள்தான்  தொண்ணூறு சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். சினிமாவிலும் இருக்கிறார்கள்.

இந்த இயக்குநர் விஜயசேகரன் நிச்சயம் வெற்றி பெறுவார். அவர் இனி அடுத்து படம் இயக்குவதோடு தயாரிக்கவும் செய்ய வேண்டும். தயாரிப்பாளரை காப்பாற்றும் இயக்குநர்கள் என்றைக்கும் நன்றாக இருப்பார்கள்.

பெரிய நடிகர்களுக்கு தைரியம் இருந்தால் ஒரு ஏரியாவை வாங்கிக் கொள்ளட்டுமே.. வியாபாரம் ஆகாத ஹீரோக்கள்கூட டப்பிங் பேசுவதற்கு முன்பாக பணம் கொடு என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா..?” என்றார்.

vijayasekaran-aari

நடிகர் ஆரி பேசும்போது, “இந்த விழாவில் கலந்து கொள்வது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. விஜயசேகரன் சாருக்காகத்தான் இந்த விழாவுக்கு வந்தேன். பாடல்கள், டிரெயிலர் இரண்டுமே நல்லா இருந்தது. இயக்குநர் ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கிறார். பொள்ளாச்சி சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே இந்தப் படம் துவங்கப்பட்டது.

சினிமா எடுப்பவர்களுக்கு காலம் பூராவும் பிரசவ வலிதான். இயக்குநர் ஒவ்வொரு விசயங்களுக்கும் மெனக்கெடுவார். இப்படத்தின் கதை சைக்காலஜிக்கலாக நகரும். மேலும் சமூகப் பிரச்சனையைப் பேசும் படம் இது. சினிமாவில் யாருமே புத்தனாக இருக்கோமோ என்றால் நிச்சயமாக இல்லை. தற்போது சிறிய படங்கள் வெளிவர சிரமமாக இருக்கிறது.  இந்நிலை மாறவேண்டும்…” என்றார்.

vijayasekaran-vela.ramamoorthy

நடிகர் வேல.ராமமூர்த்தி பேசியதாவது, “இந்த விழாவின் நாயகன் மரியா மனோகர்தான். சினேகன் எழுதிய பாடல் வரிகளை கேட்டால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது. நாங்கள் எழுத வந்த காலம் என் நினைவுக்கு வருகிறது. இப்படத்தின் ‘பட்டாம் பூச்சி’ பாடல் என்னுடைய இளம் வயதை நினைவூட்டுகிறது.

இப்படத்தின் இயக்குநர் டைட்டிலையே சிறப்பாக வைத்திருக்கிறார். படத்தையும் அருமையாக கொடுத்திருக்கிறார். இயக்குநர் விஜயசேகரன் என்னோடு அண்ணன் தம்பி போல பழகி வருகிறார். இந்த இயக்குநருக்கு ஒரு பேராசை. தான் நினைத்தது எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று மெனக்கெடுவார். இந்தப் படம் பட்ஜெட்டில் அடங்கிய படமா என்று ஆச்சரியமாக உள்ளது. அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகளையெல்லாம் மிக சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குநர்…” என்றார்.

vijayasekaran-r.v.udhayakumar

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “முதலாவதாக இந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் விஜயசேகரன் அவர்களுக்கு வாழ்த்துகள். நாங்களும் நிறைய விசயங்களைப் பேசிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனால் தீர்வுதான் கிடைக்க மாட்டேன்கிறது.

‘எல்லாரும் புத்தர்கள்’ என்பதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்காதவரைதான். வாய்ப்பு கிடைக்காதவரைதான் நாம் அனைவரும் புத்தனாக இருக்க முடியும். நல்லவனா கெட்டவனா என்றால் இந்த மேடையில் யாருமே இருக்க முடியாது. இந்த இயக்குநர் ஒரு விழாவை நடத்துவதில்கூட கில்லாடியாக இருக்கிறார். அதனால் படத்தையும் நன்றாகவே எடுத்திருப்பார் என்று நம்புகிறேன்.

சினிமா என்பது மிகப் பெரிய ஆளுமை கொண்ட ஊடகம். அப்படியான சினிமாவில் ‘சிஸ்டம் சரியில்லை. அந்த சிஸ்டத்தை சரி செய்கிறேன்’ என்று வருபவர்கள்கூட திருடிக் கொண்டு போய் விடுகிறார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்து நாட்டைக் காப்பற்றுவதைவிட அவர்கள் வளர்ந்த, அவர்களை வளர்த்த… சினிமாவில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யலாம்.

பெரிய சம்பளம் வாங்கும் நான்கு நடிகர்கள் ஒன்றாக உட்கார்ந்து பேசினாலே சினிமாவில் இருக்கும் சிக்கல்கள் தீர்ந்துவிடும். தியேட்டரில் இருந்து வரும் டிக்கெட் ஷேரைவிட பாப்கார்ன் காசிலும் நமக்கு பங்கு வந்தால் சிறு படங்களின் தயாரிப்பாளருக்கு வருமானம் வரும். தமிழ் சினிமாவில்தான் நிறைய நல்ல கிரியேட்டர்ஸ் இருக்கிறார்கள்.

இப்போது சினிமாவில் ஒரு குடும்பம் என்ற உணர்வு என்பது இல்லாமல் இருக்கிறது. கேரவன் என்ற கலாச்சாரம் எப்போது வந்ததோ அப்போதே நமக்குள் பிளவு வந்துவிட்டது. ரஜினி ‘எஜமான்’ படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் தென்னை ஓலையை போட்டுப் படுத்துக் கொள்வார். அவ்வளவு எளிமையான மனிதர் அவர். அவரை எல்லாம் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அழைத்தால் கண்டிப்பாக வருவார். நாம்தான் அழைக்க வேண்டும்.

இந்தப் படத்தில் சினேகன் தான் பிறந்த பலனை அடைந்து விட்டார் என்றே சொல்லலாம். அவர் பதினைந்து பெண்கள் மத்தியில் மிதக்கிறதைப் பார்த்தால் அவ்வளவு அழகாக இருக்கிறது. இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியைப் போலவே படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்..” என்றார்.

R.K.Selvamani

இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசும்போது, “இந்த மேடை நிறைந்திருப்பதற்கு காரணம் இயக்குநர் விஜயசேகரன் சேமித்து வைத்திருக்கும் நட்புதான். என்னுடைய 29 வருட அனுபவத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒருவர் படம் எடுத்ததில்லை என்றுதான் சொல்வேன். விஜயசேகரன் அவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார்.

அந்த சிரமத்திற்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும். இந்தப் படத்திற்கு துணை நின்ற அனைத்துத் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மகத்தான நன்றி. இப்படத்தின் பாடல்களை திரையில் பார்க்கும்போது படத்தையும் பார்க்க வேண்டும் என்று ஆவல் வருகிறது.

திரைப்பட சங்கங்களில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி பலரும் பேசினார்கள். எனக்குப் பேசிப் பேசி அலுத்துவிட்டது. நாங்கள் படம் எடுத்த காலங்களில் தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தார்கள். உழைக்கிற எல்லாருக்கும் சரியான கூலி கொடுத்தால் பிரச்சனை இல்லை. இந்தத் திரைப்படத் துறையை யாராலும் அழிக்க முடியாது.

அதேநேரம் இந்தத் திரைப்படத் துறையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. மக்களால் அங்கீகாரம் பெறப்பட்ட படங்களுக்கு விருதுகள் அளிக்கப்படவில்லை. மத்திய மாநில அரசுகளுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை. திரைப்படங்களுக்கு பெரிய எதிரி இணையம்தான்.  அது அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது.

‘எவனும் புத்தனில்லை’ என்ற தலைப்பு மிகவும் சிறந்த தலைப்பு.  சினேகன் பாடலாசிரியர் அல்ல.. பாவை ஆசிரியர் என்று சொல்லும் அளவுக்குத் திரையில் தெரிகிறார்..” என்றார்.

vijayasekaran-snekhan

பாடலாசிரியரும், கவிஞருமான சினேகன் பேசும்போது, “இந்தப் படத்தின் கதாநாயகன் பேசும்போது, இந்தப் படத்திற்காக நாங்கள் ரத்தம் சிந்தி இருக்கிறோம் என்றார். அது உண்மைதான்.

இந்தப் படத்திற்காக அனைவரும் நிறையவே இழந்திருக்கிறார்கள். உறவுகளால் பின்னப்பட்டு இந்தப்படத்தை ஆரம்பித்தார்கள். மன்னிக்க முடியாத குற்றத்தை எவராலும் செய்ய முடியாது. ஒரு படம் எடுக்குறதுக்குள் இருக்கும் அரசியலில் இருந்து வெளிவருவது மிகப் பெரிய விசயம். நல்ல கலைஞர்களுக்கு இடையில் நாகப்பாம்புகள் இருப்பதை கண்டடைய முடியவில்லை…” என்றார்.

IMG_7289

படத்தின் இயக்குநரான விஜயசேகரன் பேசும்போது, “என் வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி அண்ணன்கள்தான்.

இந்தப் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. கவிஞர் சினேகன் இந்தப் படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்கள் எல்லாம் அவர்கள் வாழ்வின் பொன்னான நேரத்தை இந்த நிகழ்வுக்கு வழங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.

வாழ்றதே ஒரு கஷ்டம்தான். நாம் எதை அடையணும்னு நினைக்கிறமோ அதுக்கான விலையைக் கொடுத்துதான் ஆகணும். படத்தை அனைவரும் திரையில் வந்து பாருங்கள்..” என்றார்.

Our Score