full screen background image

‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸர் பெற்ற அபார வெற்றி..!

‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸர் பெற்ற அபார வெற்றி..!

தல அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் கடந்த வியாழக்கிழமையன்று வெளியானது. இந்த டீசர் வெளியான 48 மணி நேரத்துக்குள் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த டீசரை கண்டு ரசித்துள்ளனர். இதுவொரு புதிய சாதனையாகும்.

இந்த டீசரில், “ஒரு மெல்லிசான கோடு… கோட்டுக்கு இந்த பக்கம் இருந்தா நான் நல்லவன்.. அந்தப் பக்கம் போய்ட்டா நான் ரொம்ப கெட்டவன்… இந்த பக்கமா, அந்த பக்கமான்னு முடிவு பண்ண வேண்டிய நேரம் வந்துச்சு.. வாழ்க்கைல ஒரு நாள்… என்னை அறிந்தால்…” என்று அஜீத் பேசும் வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படத்தின் கதையை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது. டீசரில் அஜீத் இருவிதமான தோற்றங்களில் தோன்றுகிறார். ஒரு தோற்றத்தில் வாட்டசாட்டமான இளைஞனாக, சிரித்த முகத்துடன் வருகிறார். இன்னொரு தோற்றத்தில் லேசான தாடியுடனும், கையில் துப்பாக்கியுடனும் ஆவேச முகம் காட்டுகிறார். அஜீத்தின் இந்த தோற்றம் அவரது ரசிகர்களுக்கு வெகுவாகப் பிடித்துப் போயுள்ளது.

இதுவரையிலும் ‘கத்தி’, ‘லிங்கா’, ‘ஐ’ ஆகிய படங்களின் டீஸர்கள்தான் மிக அதிக பார்வையாளர்களை பெற்று முன்னணியில் இருந்தன. ஆனால் இன்றைக்கு என்னை அறிந்தால் படத்தின் டீஸர் அதையெல்லாம் முறியடித்து வெற்றிகரமாக 22 லட்சம் பார்வையாளர்களையும் 60000 லைக்குகளையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.. இது நிச்சயமாக தமிழ்ச் சினிமாவில் ஒரு சாதனைதான்..!

இந்தச் சாதனையை அடுத்து எந்தப் படம் முறியடிக்குமென்று பொறுத்திருந்து பார்ப்போம்..

Our Score