உலகப் புகழ் பெற்ற ‘Hostel Daze’ சீரிஸின் சாயலில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய தமிழ் இணையத் தொடரான ‘எங்க ஹாஸ்டல்’, வரும் ஜனவரி 27-ம் தேதி முதல் அமேஸான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இத்தொடர் சதீஷ் சந்திரசேகர் இயக்கத்தில், தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்தொடரில் சச்சின் நாச்சியப்பன், அவினாஷ் ரமேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், சரண்யா ரவிச்சந்திரன், கௌதம் ராஜ் மற்றும் டிராவிட் செல்வம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தத் தொடர் 6 பொறியியல் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கனவுகளை மட்டும் சுமந்து கொண்டு, நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும், இளமை துள்ளும் மனதுடன் கல்லூரி விடுதிக்குள் காலடியெடுத்து வைக்கும் இளைஞர்களின் கதை இது.
அந்த விடுதியிலேயே அவர்களிடையே ஏற்படும் நட்பு, காதல், மோதல், சண்டை சச்சரவுகள் மற்றும் தேர்வுகள் போன்ற பல்வேறு பல கலவைகளின் கதம்பமாக இத்தொடர் உருவாகியுள்ளது.
நட்புறவு, மகிழ்ச்சியான தருணங்கள், காதல் உறவுகளின் உற்சாகம் மற்றும் தேர்வுகளின் அழுத்தம் ஆகியவற்றுடன் விடுதியில் வாழும் மாணவர்களின் அறியாத இன்னொரு வாழ்க்கையைப் பற்றி முழுமையாகப் பேசுகிறது இத்தொடர். இத்தொடர் நிச்சயமாக பார்வையாளர்களையும் தங்களது விடுதி நினைவுகளை அசை போட வைக்கும்.
“ப்ரைம் வீடியோவில் பலர் மிகவும் விரும்பி பார்த்து ரசித்த, இளமை கலந்த நகைச்சுவைத் தொடர்களில் ‘Hostel Daze’ ஒன்றாகும், இதன் ஒவ்வொரு புதிய சீசனிலும் ரசிகர்களின் பட்டாளம் அதிகரித்து வருகிறது.
மொழியைப் பொருட்படுத்தாமல், இத்தொடரின் உலகளாவிய தன்மை மற்றும் பிரம்மாண்டமான ஈர்ப்பு காரணமாக, இளைஞர்களை மையமாகக் கொண்ட கதையில் இத்தொடரைத் தயாரித்துள்ளோம். இந்த ‘எங்க ஹாஸ்டல்’ தொடர் பிரைம் வீடியோ ஓடிடி பார்வையாளர்களின் விருப்ப பட்டியலில் இடம் பிடிக்கும் என்று நம்புகிறோம்.” என்கிறார், பிரைம் வீடியோவின் நிகழ்ச்சி இயக்குநரான மணீஷ் மெங்கானி.
இந்த ‘எங்க ஹாஸ்டல்’(Engga Hostel) இணையத் தொடர் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வரும் ஜனவரி 27, 2023 முதல் ப்ரைம் வீடியோவில் ஒளிபரப்பாகவுள்ளது.