full screen background image

ஜெய்-‘நான் கடவுள்’ ராஜேந்திரன் இணைந்து நடிக்கும் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ திரைப்படம்

ஜெய்-‘நான் கடவுள்’ ராஜேந்திரன் இணைந்து நடிக்கும் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ திரைப்படம்

வான்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரித்து விஜய் சேதுபதி நடித்த ‘சேதுபதி’ திரைப்படம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது.

சேதுபதி வெற்றியை தொடர்ந்து ஷான் சுதர்சன், வான்சன் மூவிஸ் சார்பாக தயாரிக்கும் இரண்டாவது படம் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’.

புதுமுக இயக்குநரான மகேந்திரன் ராஜமணி இயக்குனாரக அறிமுகமாகும் இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ப்ரணிதா, கருணாகரன், காளி வெங்கட்,  ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், தம்பி ராமையா உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அஜீத் பட சூட்டிங் என்று தவறான தகவல் பரவியதால், ‘தல’ ரசிகர்கள் பலரும் அந்த இடத்தில் திரண்டு விட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர், ‘இது அஜீத் படமல்ல. ஆனால் படத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டும் காளி வெங்கட், அஜீத்தின் தீவிர ரசிகராக நடிக்கிறார்’ என்று படக் குழுவினரால் விளக்கம் அளிக்கப்பட்டது. விஷயமறிந்த ‘தல’ ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

இத்திரைப்படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ‘wrestling star Rock’ ரசிகராக நடித்துள்ளார்.  ‘Rock’ ரசிகர் என்றதும் ஆர்வத்துடன்  Rock–ன் wrestling-ஐ பார்த்து home work செய்து படப்பிடிப்பு தளத்தில் அசத்தி படக் குழுவினர் பாராட்டை பெற்றார்.

படத்தில் ஜெய், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் இருவருக்குமான காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. இருவரும் இணைந்து எதிரிகளை துவம்சம் செய்யும் முக்கிய காட்சியில் குப்பை மேடு என்றுகூட பாராமல் அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு படக் குழுவினரை வியப்பில் ஆழ்த்தியது. மேலும் இதற்கு முன் WWF எதையும் பார்த்திராத ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் தற்போது உண்மையாகவே Rock ரசிகராகவே மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Our Score