full screen background image

12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்

12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்

திரில்லர், திகில் என என்னதான் வித்தியாசமான ஜானரில் படங்கள் வந்தாலும், தமிழ் ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு பெரும் ஒரே ஜானர்… கலர்புல்லான கமர்ஷியல் படங்கள்தான்.

அதிலும் காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் கமர்ஷியல் படங்கள் என்றால், நூறு சதவீதம் வெற்றிதான். இதற்கு சான்றாக ‘கலகலப்பு’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று பல படங்களை சொல்லலாம்.

அந்த வரிசையிலான கலர்புல் காமெடிப் படமாக உருவாகியுள்ள படம்தான் விரைவில் வரவிருக்கும் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்.

எஸ்.எச்.மீடியா ட்ரீம் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சாகுல் ஹமீது இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஹீரோவாக விகாஷ் நடிக்க, ஹீரோயினாக மதுமிதா நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி ராமர், ராகுல் தாத்தா, அம்பானி சங்கர், நாஞ்சில் விஜயன், நெல்லை சிவா ஆகியோர் நடிக்க, பிரபல நடிகை சித்ராவும், நடிகர் டெல்லி கணேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க விரும்பிய நடிகை சித்ரா, பல்வேறு கதைகளை கேட்டு திருப்தியடையாதவர், இந்த கதையை கேட்டதும் ஓகே சொல்லியிருக்கிறார். டெல்லி கணேஷின் மனைவியாக நடித்திருக்கும் அவர் படத்தில் எந்த அளவுக்கு காமெடி இருக்கிறதோடு, அதே அளவுக்கு குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளும் இருந்ததால், உடனே சம்மதம் தெரிவித்தாராம்.

En_Sangathu_Aala_Adichavan_Evanda_Stills-2

லோகேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை கவி கார்கோ எழுதியிருக்கிறார். செந்தில், ராஜலட்சும் இருவரும் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். சண்டை காட்சிகளை ராக்கி ராஜேஷ் வடிவமைக்க, பவர் சிவா நடனம் அமைத்திருக்கிறார். சாஜித் படத் தொகுப்பு செய்திருக்கிறார். மக்கள் தொடர்பு பணியை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.

அறிமுக இயக்குநரான நவீன் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்குகிறார். இவர் பல முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு கேமரா உதவியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். துணை இயக்குநராகவும் பணியாற்றியவர்.

முழுக்க, முழுக்க பொழுதுபோக்குப் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது, நடிகர்களின் பட்டியலைப் பார்த்தாலே தெரிகிறது.

இவ்வளவு பெரிய நடிகர்கள் பட்டாளம் இருந்தாலும், இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் வெறும் 12 நாட்களில் இயக்குநர் நவீன் மணிகண்டன் முடித்திருப்பதுதான் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருக்கிறது.

அதிலும், மூன்று பாடல்கள், இரண்டு சண்டை காட்சிகளையும் இந்த 12 நாட்களிலேயே படமாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பட்ஜெட் அதிகரிப்பதற்கு இயக்குநர்களிடம் சரியான திட்டமிடல் இல்லாததும், அதனால் படப்பிடிப்பு நாட்கள் அதிகரிப்பதும்தான் காரணம், என்று பல தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இயக்குநர் நவீன் மணிகண்டனின் இப்பட தகவல், அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கிறது.

12 நாட்களில் முடித்தாலும், ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் எப்படிப்பட்ட கமர்ஷியல் விஷயங்கள் இருக்குமோ அவை அனைத்தையும் கொண்டு, பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் போல இப்படம் உருவாகியிருப்பது கூடுதல் சிறப்பு என்றே சொல்லலாம்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் நவீன் மணிகண்டன், “யாரையும் சாதாரணமாக நினைக்கக் கூடாது. யார் எப்போது எந்த நிலைக்கு வருவார்கள் என்றே தெரியாது’ என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு. குட்டி சுவற்றில் உட்கார்ந்து வெட்டியாக பொழுதைக் கழிக்கும் இளைஞர்களைப் பற்றிய கதைதான் இந்த படம்.

En_Sangathu_Aala_Adichavan_Evanda_Stills-13

பொறுப்பில்லாமல் இருக்கும் ஹீரோவை திருத்த அவரது அப்பா பல முறை முயற்சித்தாலும் நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் அதே அப்பாவுக்காக ஹீரோ பொறுப்பானவராக மாறுகிறார், அதற்கு அவரது காதலியும் ஒரு காரணமாக அமைகிறார். அது எப்படி என்பதுதான் கதை.

இளைஞர்களுக்கான ஒரு படமாகவும், குடும்பமாக பார்க்கக் கூடிய ஒரு படமாகவும் இந்த ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம் இருக்கும்.

சித்ரா மற்றும் டெல்லி கணேஷ், இருவரும் ஹீரோவின் அம்மா, அப்பாவாக நடித்திருக்கிறார்கள். அவர்களது போர்ஷன் செண்டிமெண்டாக இருப்பதோடு, காமெடியாகவும் இருக்கும்.

சாதாரணமான கதையாக இருந்தாலும், படம் ரசிகர்களை எண்டர்டெயின் பண்ணக் கூடிய விதத்தில் சிறப்பாக வந்திருக்கிறது. ராகுல் தாத்தா, விஜய் டிவி ராமர் ஆகியோர் காமெடியில் தனி முத்திரை பதிப்பார்கள்.

பாடல்கள் உள்ளிட்ட மொத்தப் படத்தையும் நாகர்கோவிலில் படமாக்கியிருக்கிறோம். அதே சமயம், நாகர்கோவிலா இது..! என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இதுவரை திரைப்படங்களில் காட்டாத லொக்கேஷன்களை தேடித் தேடிப் பிடித்து படமாக்கியிருக்கிறோம்.

En_Sangathu_Aala_Adichavan_Evanda_Stills-1

படம் ரொம்பவே கலர்புல்லாக இருக்கும். எப்படிப்பட்ட மனநிலையோடு தியேட்டருக்குள் வந்தாலும், படம் முடிந்து வெளியே செல்லும்போது ரசிகர்கள் சந்தோஷமான மனநிலையோடு செல்வார்கள். அதை மனதில் வைத்துதான் இந்த படத்தின் திரைக்கதையும், காட்சிகளையும் வடிவமைத்திருக்கிறேன்.

பிளாஷ் பேக் காட்சி ஒன்றில் சித்ரா பள்ளி மாணவியாகவும், டெல்லி கணேஷ் மாணவராகவும் வருகிறார்கள். இந்தக் காட்சிக்கு ஒட்டு மொத்த திரையரங்கமே வயிறு வலிக்க சிரிப்பது உறுதி…” என்கிறார்  இயக்குநர் நவீன் மணிகண்டன்.

En_Sangathu_Aala_Adichavan_Evanda_Stills-01

“12 நாட்களில் படப்பிடிப்பை முடித்தது எப்படி…?” என்று இயக்குநரிடம் கேட்டதற்கு, “நான் தமிழ்ச் சினிமாத் துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக சில படங்களில் பணியாற்றினாலும், கேமரா உதவியாளராகப் பல ஆண்டுகளாக பணியாற்றியிருக்கிறேன்.

இதனால், பல இயக்குநர்கள் பணியாற்றுவதை பார்த்திருக்கிறேன். அத்துடன், படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு, எப்படி தயாராக வேண்டும், என்பதிலும் தெளிவாக இருந்ததால்தான், 12 நாட்களில் படத்தை முடிக்க முடிந்தது…” என்றார்.

En_Sangathu_Aala_Adichavan_Evanda_Stills-32

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. பல சினிமா பிரபலங்கள் முன்னிலையில் பிரம்மாண்டமான விழாவாக நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பிரபலங்களுக்கு பாடல்கள் திரையிடப்பட்டது. பாடல்களையும், அதை படமாக்கியவிதத்தையும் பிரபலங்கள் வெகுவாக பாராட்டி பேசியதோடு, “பாடல்களை பார்க்கும்போதே தெரிகிறது, இது ரசிகர்களுக்கான படம்” என்றும், வாழ்த்தினார்கள்.

Our Score