full screen background image

‘என் இனிய தனிமையே’ படத்தின் முதல் பாடல் வெளியானது..!

‘என் இனிய தனிமையே’ படத்தின் முதல் பாடல் வெளியானது..!

வளர்ந்து வரும் நடிகரான ஸ்ரீபதி நடித்திருக்கும் ‘என் இனிய தனிமையே’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் நாயகியாக ரீஷா நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநரான சகு பாண்டியன் இந்தப் படத்தை  இயக்கியிருக்கிறார்.

தங்கர்பச்சான் படங்களில் பணியாற்றிய சிவபாஸ்கரன்  ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை இசையமைத்துள்ளார்.

‘சீதாராமம்’ படத்தின் மலையாள வெர்சனில் இடம் பெற்ற ‘ஒரு கரையாரிகே’ பாடல் புகழ் சிபி ஸ்ரீனிவாசன் ஒரு அருமையான லவ் பீட் பாடலை பாடியுள்ளார்.

அதேசமயம் கேரளாவை சேர்ந்த பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி இதயத்தை உருக வைக்கும் அம்மா சென்டிமென்ட் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

தயாரிப்பாளர் – S.P.மாலதி, நிர்வாக தயாரிப்பாளர் – ஆட்டோ புலி முருகன், இயக்குநர் – சகு பாண்டியன், இசை – ஜேம்ஸ் வசந்தன், ஒளிப்பதிவு – சிவபாஸ்கரன், படத் தொகுப்பு – திருச்செல்வம், நடன இயக்கம் – வாசு நவதீபன், உதவி இயக்கம் – சத்ரியன் சத்யராஜ், அருள் நித்தியானந்தம், சபரீஸ்வரன், கே.குருநாத் சேகர், பத்திரிகை தொடர்பு – A.ஜான், திட்ட வடிவமைப்பு –  L,விவேக்(பிரிம்ரோஸ் என்டர்டெயின்மென்ட்)

இந்த படம் சமூகத்திற்கு தேவையான ஒரு கனமான செய்தியுடன் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 2023 கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் முதல் பாடல் இன்றைக்கு வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் கதாநாயகனாக  நடித்திருக்கும் ஸ்ரீபதி 2023-ம் ஆண்டில் வெளியாக உள்ள சில தமிழ் படங்களில் டைட்டில் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சதீஷ் சரண் இயக்கத்தில் சைமன் கிங் இசையில் உருவாகியுள்ள ‘பெண்டுலம்’ திரைப்படத்தில் ‘அசுரன்’ படப் புகழ் அம்மு அபிராமி மற்றும் நடிகை கோமல் சர்மா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் மோகன் டச்சு இயக்கத்தில் கே.யு கார்த்திக் இசையில் உருவாகியுள்ள ‘அங்காரகன்’ என்கிற படத்தில் சத்யராஜ் மற்றும் மலையாள நடிகை நியா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் ஸ்ரீபதி.

Our Score