ஹீரோ உதயநிதிக்கு ஜோடி எமி ஜாக்சனாம்..!

ஹீரோ உதயநிதிக்கு ஜோடி எமி ஜாக்சனாம்..!

ஆனாலும் உதயநிதி ஸ்டாலினுக்கு ரொம்ப தைரியம்தான்..!

ஒரு படம்தான் வெளிவந்துச்சு.. அடுத்தடுத்து படங்களை தயாரிச்சுக்கிட்டேயிருக்கார். அதுலேயும் அவரே ஹீரோவா நடிக்கிற படங்கள்..!!!

இப்போது எம்.ராஜேஷின் உதவியாளர் ஜெகதீஷ் இயக்கத்தில் சந்தானம், நயன்தாராவுடன் உதயநிதி நடித்து வரும் படம் ‘நண்பேன்டா’.

இதைத் தொடர்ந்து ‘என்றென்றும் புன்னகை’ இயக்குநர் அஹமதுவின் படத்திலும் உதயநிதி நடிக்க உள்ளார். இப்படத்துக்கு ‘இதயம் முரளி’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்களாம். இதில் உதயநிதிக்கு ஜோடி ஹன்சிகா. அனிருத்துதான் இசை.

இதையும் தொடர்ந்து ‘மான்கராத்தே’ இயக்குநர் திருக்குமரன் இயக்கும் படத்திலும் உதயநிதி ஹீரோவாக நடிக்கிறாராம். இமான் இசையமைக்க.. சுகுமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடி எமி ஜாக்சனாம்.. படத்திற்கு டைட்டில் ‘கெத்து’ என்கிறார்கள்..!

உண்மையாகவே ‘கெத்து’ காட்டுகிறார் உதயநிதி..!

Our Score