full screen background image

இந்தியா-சீனா போர் பற்றிய ‘மூன்றாம் உலகப் போர்’ திரைப்படம்..!

இந்தியா-சீனா போர் பற்றிய ‘மூன்றாம் உலகப் போர்’ திரைப்படம்..!

படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது “மூன்றாம் உலகப் போர்” திரைப்படம்.

2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடக்கிறது. அந்த போரின் காரணம் என்ன…? எந்த முடிவை நோக்கி அந்த போர் நடக்கிறது…? என்பதே இந்த ‘மூன்றாம் உலகப் போர்’ படத்தின் கதையாம்.

பாலை படத்தில் நடித்த சுனில் குமார் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த அகிலா கிஷோர் படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். மற்றும் பல நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆர்டின் ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பாக டி.ஆர்.எஸ் அன்பு மற்றும் சுரேஷ் நாராயண் இப்படத்தை தயாரிக்கின்றனர். அறிமுக இயக்குனர் சுகன் கார்த்தி இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவை தேவாவும், படத்தொகுப்பை எஸ். ரிச்சர்டும் மேற்கொள்கின்றனர். வேத் ஷங்கர் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவன் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இறுதிக் கட்ட படபிடிப்பை நெருங்கிவிட்ட “மூன்றாம் உலகப் போர்” படத்தின் இசை வெளியிடு விரைவில் நடைபெறவுள்ளது.

Our Score