Jaeshan studios சார்பில் சமீபத்தில் பத்திரிக்கை, ஊடகங்கள் மற்றும் மக்களின் பேராதரவைப் பெற்ற திரைப்படம் ‘உத்தரவு மாகாராஜா.’
இந்தப் படத்தை தொடர்ந்து, நடிகர் உதயா பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கப்படும் தனது அடுத்தப் படம் பற்றிய தகவலை அறிவித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் பெயர் ‘டூப்ளிகேட்’. இப்படத்தை இயக்குநர் திரு, சசி, மற்றும் சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் குமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.
ஹார்ரர், திரில்லர் டைப்பில் உருவாகும் இப்படத்தின் சிறப்பம்சம் ஒரு பெண், ஒரு கார், ஒரு இரவு.. இதனிடையே நடக்கும் ஒரு கதை என்பதுதான்.
இத்திரைப்படத்தில் dubsmash-ல் புகழ் பெற்ற மிருணாளினி ரவி நடிக்கிறார். இவர் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’, சுசீந்திரன் இயக்கும் ‘சாம்பியன்’ மற்றும் c.v.குமார் தயாரிப்பில் ‘ஜாங்கோ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் முன்னணி கதாநாயகன் ஒருவரும் நடிக்க உள்ளார். அதன் அறிவிப்பு மிக விரைவில் வெளிவர இருக்கிறது.
ஒளிப்பதிவு – L.K.விஜய், படத் தொகுப்பு – ‘ராட்சசன்’ புகழ் சான் லோகேஷ், இசை –’உத்தரவு மகாராஜா’ படத்துக்கு இசையமைத்த நரேன் பாலகுமார், கலை இயக்குநர் – ராம், சண்டை இயக்கம் – சரவணன், மக்கள் தொடர்பு – நிகில், இணை தயாரிப்பு – மணிகண்டன் சிவதாஸ்.
முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. படத்தை வரும் ஏப்ரலில் வெளியிட நடிகர் உதயா திட்டமிட்டுள்ளார்.
இப்படத்தின் first look teaser வரும் நாளை, பிப்ரவரி 7-ம் தேதி வியாழன் அன்று வெளியாகவுள்ளது.