துல்கர் சல்மான் நடிக்கவிருக்கும் மூன்றாவது தமிழ்த் திரைப்படம்..!

துல்கர் சல்மான் நடிக்கவிருக்கும் மூன்றாவது தமிழ்த் திரைப்படம்..!

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மான் தற்போது தனது மூன்றாவது தமிழ்ப் படத்தை தேர்வு செய்துள்ளார்.

ஏற்கெனவே ‘வாயை மூடி பேசவும்’ மற்றும் ‘ஓகே கண்மணி’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரித்திருக்கும் துல்கர் சல்மான் நடிக்கப் போகும் இந்த மூன்றாவது தமிழ்ப் படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகவுள்ளது.

கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநரான கார்த்திக் இயக்கவிருக்கும் இந்த படம் ஒரு பயணம் சார்ந்த பொழுதுபோக்கு படமாக உருவாக இருக்கிறது. 

அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக் படம் பற்றிப் பேசியபோது, “வழக்கமான கிளிஷே காட்சிகள் இல்லாமல்  புதுமையான மற்றும் தனித்துவமான ஒரு பயணம் சார்ந்த படமாக இது இருக்கும்.

என் நண்பர் மற்றும் ஒளிப்பதிவாளரான ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் மூலம் துல்கர் சல்மானிடம் நான் கதை சொன்னபோதே அவருக்கு என் கதையும், திரைக்கதையும் பிடித்துப் போய் நடிக்க ஒப்புக் கொண்டார்.

துல்கர் சல்மான் போன்ற ஒரு இளம் முன்னணி நடிகர் இந்த படத்தில் நடிக்க முன் வந்தது எனக்கு ஊக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

படத்தில் மொத்தம் நான்கு நாயகியர் நடிக்கின்றனர். நான்கு கதாபாத்திரங்களுமே நன்கு வடிவமைக்கப்பட்டவை.  அறிமுக இசையமைப்பாளர் தீன தயாளன் இசையமைக்கிறார். என் நண்பர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் என் முதல் படத்தை ஒளிப்பதிவு செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்வது எனக்கு பெருமையான விஷயம்.

தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன, படப்பிடிப்பை விரைவில் துவக்க மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறோம். தமிழ்நாடு மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறோம்…” என மகிழ்ச்சியாக சொல்கிறார் அறிமுக இயக்குநரான ரா.கார்த்திக்.

Our Score