தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் பயணித்து வருபவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ். கை நிறைய படங்களுடன் ஓய்வின்றி நடித்துவரும் அவரது அடுத்த படமான ‘தென்னாட்டான் ‘படத்துக்கு நேற்று பூஜை போடப்பட்டது.
இந்தப் படத்தில் ஆர்.கே. சுரேஷ் முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கிறார். படத்தைப் புதுமுக இயக்குநர் எம்.விஜய்பாண்டி இயக்குகிறார். திவிஷா ரேஷ்மா கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் சரவணன் படத்தைத் தயாரிக்கிறார்.
‘தென்னாட்டான்’ பட பூஜை இன்று தயாரிப்பு அலுவலகத்தில் எளிமையாக போடப்பட்டது. இந்த விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பைப் தொடங்குகிறார்கள்.
Our Score