டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் ஊழல் – ராதாரவி அணி மீது ஆதாரத்துடன் புகார்..!

டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் ஊழல் – ராதாரவி அணி மீது ஆதாரத்துடன் புகார்..!

தென்னிந்திய திரைப்பட - தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங்  கலைஞர்கள் சங்கத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் கடந்த பல ஆண்டுகளாக பொறுப்பில் இருந்த நடிகர் ராதாரவியின் தலைமையில் ஒரு அணியும், ராம ராஜ்யம் அணி என்கிற பெயரில் இன்னொரு அணியும் மோதுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே டப்பிங் யூனியனில் முறைகேடுகள் நடக்கின்றன. எதிர்த்து குரல் கொடுத்தால் சங்கத்தில் இருந்து நீக்குகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்தன.

இந்த நேரத்தில் இந்தத் தேர்தலில் போட்டியிடும் 'ராம ராஜ்யம் அணி'யினர், ராதாரவி டீம் சங்கத்தின் பொறுப்பில் இருந்தபோது பல முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

அதில் முக்கியமான ஒன்று சங்கத்திற்காக வாங்கப்பட்ட நிலத்தின் தொகை அதிகமாகக் காட்டப்பட்டு, பல லட்சம் ரூபாய் சங்கப் பணம் சுருட்டப்பட்டிருப்பதாக ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளனர்.

dubbing-union-scam-1

dubbing-union-scam-2 dubbing-union-scam-3  

சங்கத்திற்காக கட்டிடம் கட்டுவதற்காக விஜயராகவபுரம் என்னுமிடத்தில் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அந்த நிலம் வாங்கப்பட்ட தொகையின் மதிப்பு 75 லட்சம் ரூபாய் என்று சங்கத்தின் ஆண்டறிக்கையில் சங்க நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இந்த நிலத்தை வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அறிந்த சிலர் தனிப்பட்ட முறையில் முயற்சி செய்து வில்லங்கச் சான்றிதழை பதிவுத் துறையில் கேட்டுப் பெற்ற போது அதில் அந்தக் குறிப்பிட்ட நிலத்தை 47 லட்சத்து 50 ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் சங்கத்தின் ஆண்டறிக்கையில் 75 லட்சம் ரூபாய் சொல்லிவிட்டு 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை சங்கத்தின் நிர்வாகிகள் முறைகேடாக எடுத்துள்ளனர் என்று இப்போது இவர்களை எதிர்த்து தேர்தலில் நிற்கும் ராம ராஜ்யம் அணியினர் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீண்ட வருடங்கள் கழித்து நடைபெறும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இந்த ஊழல், முறைகேடுகளும் அம்பலத்திற்கு வந்துள்ளதால் சங்கத்தின் உறுப்பினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.