full screen background image

சி.பி.ஐ. அதிகாரியாக பிரியாமணி நடிக்கும் ‘DR 56’ திரைப்படம்

சி.பி.ஐ. அதிகாரியாக பிரியாமணி நடிக்கும் ‘DR 56’ திரைப்படம்

ஸ்ரீலட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் A.N. பாலாஜி வழங்க, ஹரி ஹரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தமிழ் மற்றும் கன்னட  மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படம் DR 56.’

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 9-ம் தேதி ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

தேசிய விருது பெற்ற பிரபல நடிகை பிரியாமணி இந்த படத்தின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் பிரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட், யத்திராஜ், வீணா பொன்னப்பா, மஞ்சுநாத் ஹெக்டே, சுவாதி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் ராஜேஷ் ஆனந்த் பேசும்போது, “இது அறிவியல் சார்ந்த கிரைம் திரில்லர். தற்போது சமூகத்தில் நிலவி வரும் உண்மைச் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறோம். ப்ரியாமணி CBI அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்தக் கதையை சொல்லும்போதே ப்ரியாமணி மிகவும் பிரமிப்பானார். நேர்த்தியான CBI அதிகாரியாக நடிக்க தன்னை முற்றிலும் தயார்படுத்திக் கொண்டார். படம் தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுத்ததால் ஓரே காட்சிகளை மாற்றி, மாற்றி எடுப்பதில் சவாலாக இருந்தது. விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களை அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும்.” என்றார்.

இந்தப் படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Our Score