full screen background image

“வரலாறு தெரிஞ்சுட்டு பேசுங்க..” வெற்றிமாறனுக்கு குஷ்பூவின் அறிவுரை..!

“வரலாறு தெரிஞ்சுட்டு பேசுங்க..” வெற்றிமாறனுக்கு குஷ்பூவின் அறிவுரை..!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவனின் 60-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு மணி விழா சமீபத்தில் எடுக்கப்பட்டது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் பேசிய வெற்றிமாறன், “தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும்; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படி தொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள்” என பேசியிருந்தார். வெற்றிமாறனின் இந்தப் பேச்சுக்கு ஒரு சேர ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது.

இந்த நிலையில் வெற்றி மாறனின் இந்தப் பேச்சுக்கு நடிகை குஷ்பூ இன்று பதிலளித்துள்ளார்.

இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த குஷ்பு, “இயக்குநர் வெற்றி மாறன் தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். உலகம் எந்த பார்வையில் பார்க்கிறதோ அதைத்தான் பார்க்க வேண்டும். அனைத்திலும் தப்பு கண்டுபிடிக்க வேண்டும். தன்னுடைய நோக்கத்தில் மட்டும்தான் பார்ப்பேன் என்று அவர் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வரலாறு பற்றி ஆய்வு தெரியாமல் மணிரத்னம் படம் எடுத்திருக்க மாட்டார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். இது தமிழ் படம் தெலுங்கு படம் என்று இல்லை. இது ஒரு பான் இந்தியா படம். தமிழர்களின் வரலாறை கூறியிருக்கும் படம். முகம் காட்டாமல் விமர்சனம், எதிர்கருத்து சொல்பவர்களை பற்றி கவலையில்லை..” என்றார். 

Our Score