full screen background image

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் மே 13-ம் தேதி வெளியாகிறது..!

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் மே 13-ம் தேதி வெளியாகிறது..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டாக்டர்’ திரைப்படம் வரும் மே 13-ம் தேதி ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் SK Productions நிறுவனமும், தயாரிப்பாளர் கொடாப்பாடி J.ராஜேஷ் அவர்களின் K.J.R. Studios நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் டாக்டர்.’ 

இப்படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகி பாத்திரத்தில் நடிக்க, வினய் ராய் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, மிலிந்த் சோமன், அருண் அலெக்ஸாண்டர், சுனில் ரெட்டி, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இசை – அனிருத், ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன், படத் தொகுப்பு – R.நிர்மல், உடைகள் வடிவமைப்பு – பல்லவி சிங், கலை இயக்கம் – D.R.K.கிரண். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குநரான நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் சென்ற வருடக் கடைசியில் வெளியாகியிருக்க வேண்டியது. தியேட்டர்களில் 50 சதவிகிதப் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவினால் சுதாரித்து பின் வாங்கியது.

பின்பு ‘மாஸ்டர்’ படம் ரிலீஸாகி அதன் ரிசல்ட்டை பார்த்த பின்பு வெளியிடலாம் என்று காத்திருந்தார்கள். ‘மாஸ்டரின்’ ரிசல்ட் சக்ஸஸாக வர கோடை விடுமுறையில் இதனைக் கொண்டு வரலாம். அதுதான் சிவகார்த்திகேயனின் ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்க சரியாக இருக்கும் என்று எண்ணி மார்ச் 26-ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவித்தார்கள்.

ஆனால் திடீரென்று தமிழக சட்டப் பேரவைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் மார்ச் 26-ம் தேதி வெளியாகவிருந்த டாக்டர் படத்தை மீண்டும் ஒத்தி வைத்தார்கள்.

இப்போது சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்து முடிந்த பிறகு மார்ச் 13 ரம்ஜான் தினத்தன்று இத்திரைப்படத்தைத் திரையரங்குகளுக்குக் கொண்டு வருவதாக அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

Our Score