“நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக தான் தயாரித்த படத்தில் விஷால் நடிக்க வராமல் போனதால்தான் அந்தப் படம் நிறுத்தப்பட்டதாக” அந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற படத்தை விஷால், கார்த்தி நடிப்பில் பிரபுதேவாவின் இயக்கத்தில் உருவாக்கத் திட்டமிட்டேன்.

“இந்தப் படத்தில் அனைத்து நட்சத்திரங்களுக்கும் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்து படத்தைத் தயாரித்து வெளியிடுவேன். போட்ட காசுக்கு மேல் எவ்வளவு பணம் வந்தாலும் அது அத்தனையையும் நடிகர் சங்கத்திற்கே கொடுத்துவிடுவேன்…” என்று அவர்களிடத்தில் சொன்ன பின்புதான் அந்தப் படத்தைத் துவக்கினேன்.
என்னுடைய கணிப்பின்படி அந்தப் படத்தின் மூலமாக சுமாராக 15 கோடி ரூபாய் லாபமாக கிடைக்கும் என்று கணித்திருந்தேன். அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு கார்த்தி வந்து நடித்துக் கொடுத்தார். ஆனால் விஷால் வரவேயில்லை. ஏன் வரவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. இதனாலேயே அந்தப் படம் அப்படியே நின்று போனது. இப்போதும் விஷால் வந்து நடித்தால் அந்தப் படத்தை நிச்சயமாகத் தயாரிப்பேன்..” என்று சொல்லியிருக்கிறார்.