full screen background image

V.Z.துரை தயாரித்துள்ள ‘டிஸ்டண்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!

V.Z.துரை தயாரித்துள்ள ‘டிஸ்டண்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!

‘முகவரி’, ’தொட்டி ஜெயா’, ‘இருட்டு’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநரான V.Z.துரை, டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘டிஸ்டண்ட்’ என்ற சயின்ஸ் பிக்ஸன் கலந்த திரில்லர் படத்தை தயாரித்திருக்கிறார்.

இந்த ‘டிஸ்டண்ட்’ படத்தின் நாயகனாக அறிமுக நாயகன் சுரேஷ் நல்லுசாமி நடிக்கிறார். விஜய் டிவியின் ‘ஆயுத எழுத்து’ தொடரில் நடிக்கும் சௌந்தர்யா நஞ்சுதன் இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் சுரேஷ் நல்லுசாமி, சௌந்தர்யா நஞ்சுதன், பிக் பிரிண்ட் கார்த்திக், ராதாகிருஷ்ணன், முத்துபாண்டியன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இயக்கம் – ஜி.கே., இசை – விஜய் சித்தார்த்தா, ஒளிப்பதிவு – பிரவீன் குமார், பாடல்கள் – ஆதி, படத் தொகுப்பு – ராகுல், கலை இயக்கம் – தேவா, சண்டை இயக்கம் – சுதேஷ், மக்கள் தொடர்பு – கே.எஸ்.கே.செல்வா, VFX – முத்துக்குமரன், மாடல் மேக்கர் – அருண், பாடியவர் – சில்வி சரோன், தயாரிப்பு:  சுரேஷ் நல்லுசாமி | முருகன் நல்லுசாமி.

கடந்த 2017-ம் ஆண்டு ‘ராடன் பிலிம் பெஸ்டிவெல்’ குறும்பட போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற சிறந்த குறும்படம் ‘அசரீரி’. அந்த படத்தை இயக்கிய ஜி.கே தொடர்ந்து ‘காதலின் தீபம் ஒன்று ‘ என்ற குறும்படத்தை இயக்கினார். இது யூடியுபில் ஒரு மில்லியனுக்கு மேலான பார்வையாளர்களை கடந்து அனைவராலும் வெகுவாகப் பாராட்டினை பெற்றது. இந்த ஜி.கே.தான் இந்த ‘டிஸ்டண்ட்’ படத்தையும் இயக்கியிருக்கிறார்.

இந்தக் குழுவினரால் மிகவும் வித்தியாசமான கதைக் களத்தில் Sci-Fi திரில்லராக உருவாகியுள்ள இந்த ‘டிஸ்டண்ட்’ எனும் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்பட்டு விரைவில் வெளிவர இருக்கிறது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பிரபல வில்லன் நடிகர் கபீர் துகான் சிங் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Our Score