2015-2017 ஆண்டிற்கான தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலின் வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
தற்போது நிர்வாகத்தில் இருக்கும் விக்ரமன் தலைமையிலான அணி மீண்டும் அதே பதவிகளுக்கு அதே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
தலைவர் பதவிக்காக இயக்குநர் விக்ரமன், பொதுச் செயலாளர் பதவிக்காக இயக்குநர் R.K.செல்வமணியும், பொருளாளர் பதவிக்காக இயக்குநர் V.சேகரும் போட்டியிடுகின்றனர்.
துணைத் தலைவர் பதவிக்காக இயக்குநர்கள் P.வாசு, K.S.ரவிக்குமார் ஆகியோரும், இணைச் செயலாளர் பதவிக்காக இயக்குநர்கள் லிங்குசாமி, சுந்தர்.C, பேரரசு, மற்றும் இணை இயக்குநர் ஏகம்பவாணன் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர் பதவிக்காக இயக்குநர்கள் சமுத்திரகனி, ரமேஷ் கண்ணா, மனோஜ்குமார், மனோபாலா, ரவி மரியா, R.புவனா, மற்றும் இணை இயக்குநர்கள் நம்பிராஜன், வேல்முருகன், ராஜா கார்த்திக், திருமலை, கண்ணன்.R ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இதில் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணியும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட வி.சேகரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதேபோல் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பி.வாசுவும், கே.எஸ்.ரவிக்குமாரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
பெரிதாக எதிர்ப்புகள் இல்லையென்றாலும் இணை, துணை, உதவி இயக்குநர்கள் சார்பில் ‘புதிய அலைகள்’ என்ற பெயரில் 9 இணை இயக்குநர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
இவர்களில் ஆ.ஜெகதீசன், பாலமுரளிவர்மன் ஆகியோர் இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ஐந்து கோவிலான், விருமாண்டி, சண்முகம், திருமதி சந்திரா சுந்தர், மணி நாகராஜ், காமராஜ், மூதுரை பொய்யாமொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டியிடுகின்றனர். 4 இணைச் செயலாளர்கள் பதவிக்கு 8 பேர் போட்டியிடுகின்றனர். 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 27 பேர் போட்டியிடுகின்றனர்.
வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவர்களின் முழு பட்டியல் :
தலைவர் :
1. இயக்குநர் விக்ரமன்
2. இயக்குநர் செந்தில்நாதன்
3. முரளி
பொதுச் செயலாளர் :
இயக்குநர் R.K.செல்வமணி
பொருளாளர் :
இயக்குநர் V.சேகர்
துணைத் தலைவர்கள் :
1. இயக்குநர் P.வாசு,
2. இயக்குநர் K.S.ரவிக்குமார்
இணைச் செயலாளர்கள் :
1. இயக்குநர் லிங்குசாமி
2. இயக்குநர் சுந்தர்.C
3. இயக்குநர் பேரரசு
4. இயக்குநர் செந்தில்நாதன்
5. இயக்குநர் A.ஜெகதீசன்
6. A.D எல்லையப்பன் என்கிற ஜாக்கிராஜ்
7. ஐந்து கோவிலான்
8. பாலமுரளி
செயற்குழு உறுப்பினர்கள் :
1. இயக்குநர் .ரமேஷ்கண்ணா
2. இயக்குநர் மனோஜ்குமார்
3. இயக்குநர் மனோபாலா
4. இணை இயக்குநர் நம்பிராஜன்
5. இயக்குநர் ராஜா கார்த்திக்
6. இணை இயக்குநர் வேல்முருகன்
7. இயக்குநர் திருமலை
8. இயக்குநர் ரவிமரியா
9. இயக்குநர் திருமதி.R.புவனா
10. இயக்குநர் கண்ணன்.R
11. இயக்குநர் சமுத்திரகனி
12. இயக்குநர் ஜெயம் ராஜா
13. இயக்குநர் T.P.கஜேந்திரன்
14. இயக்குநர் கதாக திருமாவளவன்
15. R.சிபி
16. R.K.கண்ணன்
17. M.C.சேகர்
18. A.D எல்லையப்பன் என்கிற ஜாக்கிராஜ்
19. மூதுரை பொய்யாமொழி
20. ஆரல் தி மனோகர்
21. T.R.விஜயன்
22. P.விருமாண்டி
23. M.சண்முகம்
24. திருமதி. சந்திரா
25. நாகராஜன் மணிகண்டன்
26. K.காமராஜ்
27. A.சுகுமார் @ சூர்யா