full screen background image

கருப்புப் பணம் வைத்திருக்கும் கமல்ஹாசன் – இயக்குநர் விசு காட்டமான விமர்சனம்

கருப்புப் பணம் வைத்திருக்கும் கமல்ஹாசன் – இயக்குநர் விசு காட்டமான விமர்சனம்

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரப் போவது உறுதி என்கிற நிலையில் பல அரசியல் தலைவர்களும் அவரது வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். பலரும் வரவேற்றும், சிலர் கிண்டலடித்தும் பேசி வருகிறார்கள்.

இந்த நேரத்தில் திரைத்துறையைச் சேர்ந்த சிலரே கமல்ஹாசனை விமர்சித்து பேச ஆரம்பித்துள்ளனர். அவர்களில் பிரபல இயக்குநரான விசு தனது முகநூல் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளார். நடிகர் விசு பாரதீய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விசு வெளியிட்டிருக்கும் செய்தி இதுதான் :

“ஹலோ கமல்ஜீ.

நீங்க நடிச்ச ‘சிம்லா ஸ்பெஷலுக்கு’ கதை, திரைக்கதை, வசனம் எழுதின விசு நான்..

பெரிய அரசியல்வாதி ஆயிடுவீங்க வாழ்த்துக்கள்..

இந்து மதமும், இந்துக்களும்… வடிவேலுவோட பாஷைல சொல்லப் போனா ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க’ங்கறதைப் புரிஞசுண்டு, அவங்களை சீண்டி விட்டா, யாராவது எங்கேயாவது எகிறுவான்.. அவனை வச்சு பாலிடிக்ஸ் பண்ணலாம்னு யாரோ ஒரு குள்ள நரி உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கு.

‘இந்து மதம் தீவிரவாதிகள் இல்லாத மதம் இல்லைன்னு சொல்ல முடியாது’ன்னு நீங்க எதையோ வழக்கம் போல தலைய சுத்தி வளைச்சு மூக்கைத் தொடப் போக, யாரோ ஒருத்தன் எஙகேயோ மூலைல ‘உங்களைத் தூக்கில போடணும்’ன்னு கதறப் போக, அரசியல்ல போணி ஆனவன்.. ஆகாதவன், அரசியல்ல விளங்கினவன்.. விளங்காம போனவன், அரசியல்ல கொடி கட்டி பறக்கறவன்… கொடியை ஆடு, மாடு மேயவிட்டவன்னு எல்லாரும் நான் / நீன்னு போட்டி போட்டுக்கிட்டு டிவி முன்னாடி வந்து வரிசைல நிக்கறாங்க, அவங்கவங்க மேதா விலாசத்தைக் காட்ட…

ஊடகத்துக்கு அடுத்த 15 நாளைக்குத் தீனி கிடைச்சாச்சு.. அடுத்தது இருக்கவே இருக்கு.. Points நான் எடுத்துத் தரேன்.

பார்ப்பனன், ஆரியக் கூட்டம், கைபர் / போலன் கணவாய், ஆப்கானிஸ்தான்ல ஆடு மாடு மேய்ச்ச கூட்டம்,.. இப்படி ஒவ்வொண்ணா எடுத்து விடுங்க.. பிச்சுக்கிட்டு போகும்.. பாவம் உங்களுக்கும் வீட்டுல பொழுது போக வேணாமா.. யாருமே இல்லை.. தனிக்கட்டை..  வயசும் ஆயாச்சு..

ஆமாம்.., உங்களுக்கு BJP மேல அப்படி என்ன சார் கோவம்..?

சென்சார் போர்ட்ல உங்களுக்கு வேண்டாதவங்களை அதிகாரி ஆக்கினாங்களே..? அதுவா..? அதெல்லாம் இருக்காது.. அவர் இதுக்கெல்லாம் மேல பாத்தவர்ன்னு நான் சொல்லிட்டேன்.. இருந்தாலும்..

அது இருக்கட்டும் சார்.. ஒழுங்கா வரி கட்டறீங்களாமே.. அப்படியா…? சூப்பர்.. புக்குல காட்டற வரவுக்குத்தானே..? அதாவது 100 ரூபாய் வரும்படின்னா, அதை 40 ரூபாய்ன்னு புக்குல காட்டி, அந்த 40 ரூபாய்க்கு ஒழங்கா வரி கட்டறீங்க.. அதானே.. அப்ப மீதி 60 ரூபாய் கருப்புதானே.. புரியும்படியா சொல்லுங்க.. நான் ஒரு ஞான சூனியம்.

ஒரு யோசனை.. பையில ஒரு மைக் வச்சுக்குங்க.. நாளைக்கே நெய்வேலி போங்க.. பழுப்பு நிலக்கரி சுரங்கத்து மேல ஏறி நின்னு சும்மா சுத்தி வேடிக்கை பாருங்க… கூட்டம் கூடும்.. அது போதும்.. அதுக்குப் பேருதான் Publicity Stunt.

‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ கமலஹாசா’ன்னு பாட்டு எங்கேயோ கேக்குது.. ஜமாய்ங்க..”

Our Score