“போட்டோவை நல்லா பாருங்க. லவ்வா இல்லையான்னு தெரியும்” – இயக்குநர் விக்னேஷ் சிவன் மழுப்பல்..!

“போட்டோவை நல்லா பாருங்க. லவ்வா இல்லையான்னு தெரியும்” – இயக்குநர் விக்னேஷ் சிவன் மழுப்பல்..!

இன்றைய நிலவரப்படி கோடம்பாக்கத்தில் 'எந்திரன்-2' எப்போது துவக்கம் என்கிற ஆர்வத்தைவிடவும் நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்துவிட்டதா இல்லையா என்கிற தேடல் ஆர்வமே அதிகமாக இருக்கிறது.

இது குறித்து இன்றைய ‘தினத்தந்தி’ பத்திரிகைக்கு பேட்டியளித்திருக்கும் இயக்குநர் விக்னேஷ், எல்லாவற்றுக்கும் பூசி மெழுகியே பதில் சொல்லியிருக்கிறார்.

"நயன்தாராவுடன் உங்களுக்குத் திருமணம் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறதே..?" என்ற கேள்விக்கு, "அதில் உண்மை இல்லை. திருமணம் என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் ஊர்- உலகத்துக்கு தெரிந்துதான் நடக்கும். அதுபோல்தான் என் திருமணமும் எல்லோருடைய வாழ்த்துகளுடன்தான் நடக்கும்.

எனக்கும், நயன்தாராவுக்குமான உறவு எங்களின் தனிப்பட்ட விஷயம். நானும் நயன்தாராவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சற்று உற்று கவனியுங்கள். அது செட்டப்பா அல்லது உண்மையான புகைப்படம்தானா என்பது தெரியும்..” என்றும் சூசகமாக பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ்..!

உஷ்.. அப்பாடா.. இவங்ககிட்ட உண்மையை வரவழைக்கிறதுக்குள்ள நாலஞ்சு கிசுகிசுவாவது எழுதிடலாம் போலிருக்கு..!