நடிகர் சிம்பு என்னும் சிலம்பரசன் நடிகர் சங்கத்தில் இருந்து விலக இருப்பதாக நேற்று முன்தினம் இணையத்தளம் ஒன்றிற்கு அளித்த பேட்டி நன்றாகவே வேலையைக் காட்டி வருகிறது.
உறுதிப்படுத்தப்படாத இந்தப் பேட்டியையொட்டி விகடனுக்கு பேட்டியளித்த நடிகர் சங்கத்தின் தலைவரான நாசர், “சிம்புவின் விலகலை நடிகர் சங்கம் ஏற்றுக் கொள்ளாது. அவரை எப்பாடுபட்டாவது நாங்கள் சங்கத்தில் வைத்துக் கொள்வோம். அவரை சமாதானம் செய்வோம்..” என்றார்.
இன்னொரு பக்கம் நடிகை ராதிகா தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஊடேயே டிவிட்டரில் “சிம்பு சங்கத்தைவிட்டு போகக் கூடாது. அது நாம் உருவாக்கிய சங்கம். நம்ம சங்கம்.. எந்தப் பிரச்சினையா இருந்தாலும் நாம உள்ளேயிருந்துதான் போராடணும்…” என்று மறைமுகமாகத் தூண்டில் போட்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் சிம்புவை பெற்றெடுத்த தந்தை டி.ஆரும் தன் பங்குக்கு சிம்பு நடிகர் சங்கத்தைவிட்டு வெளியே போகக் கூடாது என்று அறிக்கையே விட்டிருக்கிறார்.
அது இங்கே :
ஒருவேளை அப்பா ஐரோப்பாலேயும், மகன் அண்டார்டிகாலேயும் இருக்காங்க போலிருக்கு..! இதுக்காக மாடில இருக்குற பையனுக்கு தரைத்தளத்துல இருக்குற அப்பா, 2 பக்கத்துக்கு மாய்ஞ்சு, மாய்ஞ்சு கடுதாசி எழுதி அதையும் மீடியாக்களுக்கு அனுப்பி வைக்கிறதையெல்லாம் பார்த்தா நம்ம நாடு ரொம்ப வளர்ச்சியடைஞ்சிருக்குன்னுதான் சொல்லணும்..!











