full screen background image

‘சகலகலாவல்லவன்’ படத்தில் த்ரிஷா அடாவடி பார்ட்டியாம். அஞ்சலி அமைதியின் திருவுருவமாம்..!

‘சகலகலாவல்லவன்’ படத்தில் த்ரிஷா அடாவடி பார்ட்டியாம். அஞ்சலி அமைதியின் திருவுருவமாம்..!

‘சகலகலாவல்லவன்’ திரைப்படத்தில் த்ரிஷாவும், அஞ்சலியும் நேர் எதிர் குணங்கள் கொண்ட கேரக்டர்களில் நடித்திருப்பதாக கூறினார் அப்படத்தின் இயக்குநர் சுராஜ்.

IMG_5066

நேற்று மாலை நடைபெற்ற ‘சகலகலாவல்லவன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் சுராஜ் பேசும்போது, “எனக்கு காமெடிதான் நல்லா வரும். இடையில் காதல் கதை எடுத்தேன். தோல்வி அடைந்தது. இனி நமக்குத் தெரிந்ததைச் செய்வோம் என்று இருக்கிறேன்.

சமீபத்தில் ரிலீஸான ஜெயம் ரவியின் ‘ரோமியோ ஜூலியட்’ காதல் கதை. வரவுள்ள ‘தனி ஒருவன்’ ஆக்ஷன் கதை. ஆனால், இது முழுக்க  முழுக்க காமெடி கதை.  

இந்தக் கதையை ஜெயம் ரவிகிட்ட முதல்ல சொல்லும்போது முடிச்சவுடனேயே ‘சரி பார்க்கலாம்’னு சொல்லிட்டுப் போயிட்டாரு. ரெண்டு நாள் கழிச்சு போன் செஞ்சு ‘ஸார் பண்ணலாம். நான் ரெடி’ன்னாரு. அந்த ரெண்டு நாள்ல நான் சொன்ன கதையின் நாயகனா தன்னை வைச்சுப் பார்த்து யோசிச்சாராம். ‘சரி’ன்னு பட்டுச்சு. ஒத்துக்கிட்டு வந்துட்டாரு.

APPATAKKARU02a

ஜெயம் ரவியை இதுவரைக்கும் நீங்க பார்க்காத ஒரு பேட்டர்ன்ல இந்தப் படத்துல பார்க்கலாம்.. தயாரிப்பாளர்கள் எனக்கு நிறைய உதவிகள் செஞ்சாங்க. எந்தக் கேள்வியும் கேட்காமல் செலவைப் பற்றியும் கவலைப்படாமல் பணப் பெட்டியை திறந்து காட்டினாங்க. அதுனாலதான் இத்தனை வேகமா படத்தை முடிக்க முடிஞ்சது..

படத்துல த்ரிஷா அடாவடி பார்ட்டி.. ஆனால் நிஜத்துல சாந்த சொரூபி. அதே சமயம் படத்துல அஞ்சலி அமைதியா இருப்பாங்க. ஆனா நிஜத்துல..? தினமும் சாயந்தரம் ஷூட்டிங் முடிஞ்சா த்ரிஷா பட்டுன்னு கிளம்பிருவாங்க. ஷாட் முடிஞ்சவுடனேகூட ஓரமா போய் உக்காந்து புத்தகம் படிக்க ஆரம்பிச்சிருவாங்க.

DSC_8614

இந்த அஞ்சலியை மட்டும்தான் கிளப்ப முடியாது.. பக்கத்துல யார்கிட்டயாச்சும் போய் வம்பிழுத்து வைச்சுக்கிட்டிருப்பாங்க. இப்படித்தான் ஒரு நாள் சூரிகிட்ட போய் சண்டை போட்டு அவரோட ஐ போனை உடைச்சுட்டாங்க.

இப்பக்கூட சூரி போன் செஞ்சாப்புல.. கல்கத்தால அஜீத் ஷூட்டிங்ல இருக்கேன்னாரு. ‘அஞ்சலி வந்திருக்கா?’ன்னு கேட்டாரு. ஆமாண்ணே.. ‘அப்போ அந்த ஐ போனுக்கு காசு கேளுண்ணேன்’னாரு. நானும் இப்போ உங்க முன்னாடியே கேட்டுட்டேன். சூரி காமெடியில் ஒரு படி மேலே போயுள்ள படம் இது.

என் நட்புக்காக விவேக் சார் இதில் மொட்டையும் போட்டு நடித்துள்ளார். அவர் வருகிற கடைசி அரைமணி நேரம் தியேட்டர்கள் நிச்சயம் சிரிப்பலையில் குலுங்கும்..” என்றார் நம்பிக்கையாக..!

Our Score