full screen background image

“ஐ’ படத்துக்காக விக்ரமுக்கு தேசிய விருது நிச்சயமாக கிடைக்கும்” – இயக்குநர் ஷங்கரின் நம்பிக்கை..!

“ஐ’ படத்துக்காக விக்ரமுக்கு தேசிய விருது நிச்சயமாக கிடைக்கும்” – இயக்குநர் ஷங்கரின் நம்பிக்கை..!

நேற்று மாலை நடைபெற்ற ‘ஐ’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவின் நிறைவாக இயக்குநர் ஷங்கர் நன்றியுரை ஆற்றியதில் இருந்து சில பகுதிகள் :

“இந்த பங்ஷனுக்காக ரஜினி ஸாரை நேர்ல மீட் பண்ணி கூப்பிட்டவுடன் ‘நான் ஒரு பிரெண்ட்டா இந்த விழாவுக்கு நிச்சயம் வர்றேன்’ என்று சொல்லி இங்கே வந்தார். அவருக்கு எனது நன்றி.

முதல்ல இந்தப் படம் எப்படி உருவாச்சுன்னா.. ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஸாரை நான் மீட் பண்ணினப்போ.. ‘வழக்கமா பண்ற மாதிரியில்லாம.. இதுவரைக்கும் யாருமே செய்யாத மாதிரி.. பெரிசா பண்ணுவோமே’ன்னு சொன்னார்.. அவர் சொல்லி ஆரம்பிச்சதுதான் இந்த ‘ஐ’.

இந்தப் படம் லஞ்சம், ஊழல், திருட்டுத்தனம் பற்றியோ, இட ஒதுக்கீடு, அரசியல் பத்திய படமோ இல்லை.. முற்றிலும் புதுமையான ரொமான்டிக் திரில்லர். எனக்கு ரொம்ப நாளா ஒரேயொரு எழுத்துல தலைப்பு வைக்கணும்னு ஆசை.. இந்தப் படத்துக்கு டிரை செய்யலாமேன்னு யோசிச்சேன்..

இந்தப் படத்துக்கு ‘அழகன்’, ‘ஆணழகன்’ போன்ற டைட்டில்கள்தான் பொருத்தமா இருக்கும். ஆனா இந்த டைட்டில்கள்ல ஏற்கெனவே படங்கள் வந்திருச்சு.. ஸோ  வேற ஏதாவது யோசிச்சு வைக்கணும்னு நினைச்சப்பதான் இந்த ‘ஐ’ என்ற தலைப்பு சிக்கிச்சு. ‘ஐ’ என்றால் அழகு என்றும் அர்த்தம் இருக்கு..!

விக்ரம் மாதிரியான ஒரு நடிகரால் மட்டுமே இந்த கேரக்டரை செய்ய முடியும். தன் உடலை 20 கிலோ குறைச்சு.. திடீர்ன்னு ஏத்தி.. இவ்ளோ கஷ்டப்பட்டு நடிச்சிருக்காருன்னா விக்ரனின் ஆர்வத்தையும் நடிப்பு வெறியையும் நான் பாராட்டுறேன்.. இந்தப் படத்துல நடிச்சதுக்காக விக்ரமுக்கு நிச்சயமா தேசிய விருது கிடைக்கும்னு சொல்றாங்க.. அது கிடைக்கட்டும். அதுக்கு முன்னாடி மக்களோட கைதட்டல்கள்தான் அதிகம் கிடைக்கும்னு நான் நம்புறேன்.

இந்தப் படத்தோட கம்போஸிங்கிற்காக ஏ.ஆர்.ரஹ்மானுடன் உட்காரும்போதே அவர்கிட்ட சொன்னேன்.. எது மாதிரியும் இல்லாத.. இதுவரைக்கும் நீங்கள் அமைக்காத புது மெட்டுக்களா இருக்கணும்னு சொன்னேன். அவரும் அதைப் புரிஞ்சுக்கிட்டு வொர்க் பண்ணினார். ரஹ்மானோட நான் 20 வருஷமா டிராவல் பண்ணிக்கிட்டிருக்கேன்.. ஒவ்வொரு தடவையும் புதுசு புதுசா திங்க் பண்றார்.. இசையமைக்கிறார்.. இந்தப் படத்துல கபிலனோட எழுத்துல வரும் என்னோடு நீ இருந்தால் பாடல் நிச்சயம் இந்த வருஷத்தோட மிகப் பெரிய ஹிட் பாடலா இருக்கும்னு உறுதியா நான் நம்புறேன்..!

இவ்ளோ பெரிய பங்ஷனை ஏற்பாடு செஞ்ச பப்பூவுக்கு எனது நன்றி.. நான்கூட தயாரிப்பாளர்கிட்ட சொன்னேன்.. நாமளே ஆடியோவை ரிலீஸ் செஞ்சுட்டு கேஸட்டை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்திரலாம் ஸாருன்னு.. ரவி ஸாரோ, ‘இது என் படம் ஸார்.. பிரமாண்டமாத்தான் இருக்கணும்..’ சொல்லி தடபுடலா ஏற்பாடு பண்ணி இந்த அளவுக்கு கொண்டு வந்துட்டார்.. அவருக்கு எனது நன்றி..!

படத்துல நடிச்ச அத்தனை ஆர்ட்டிஸ்ட்டுகள.. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஸார்.. என்னோட அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்.. இசையமைப்பாளர் ரஹ்மான்.. சண்டை பயிற்சியாளர் அனல் அரசு.. எடிட்டர் ஆண்டனி, கலை இயக்குநர் முத்துராஜ் என்று இவர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களுக்கும் எனது நன்றிகள்..

ரசிகர்களாகிய நீங்க இந்தப் படத்தை எந்த அளவுக்கு எதிர்பார்த்து காத்திருக்கிறீர்களோ.. அதே அளவுக்கு உங்களுடைய எதிர்பார்ப்பை நிச்சயமா இந்தப் படம் பூர்த்தி செய்யும் என்று உறுதியா நம்புறேன்.. வந்திருந்து வாழ்த்திய அத்தனை ரசிகர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி..” என்றார் இயக்குநர் ஷங்கர்.

Our Score