full screen background image

பிரபல இயக்குநர் இராம.நாராயணன் காலமானார்..!

பிரபல இயக்குநர் இராம.நாராயணன் காலமானார்..!

பிரபல மூத்தத் தமிழ்த் திரைப்பட இயக்குநர் இராம.நாராயணன் இன்று சிங்கப்பூரில் காலமானார்.

கடந்த சில வருடங்களாகவே சிறுநீரகக் கோளாறு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த இராம.நாராயணன் சமீபத்தில் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

அங்கிருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று இரவு மரணமடைந்தார்.

அவரது உடல் நாளை மாலை சென்னை கொண்டு வரப்பட இருக்கிறது. செவ்வாய்கிழமை காலையில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தெரிகிறது..!

Our Score