தமிழ்ச் சினிமாவில் புதிய வாரிசு நடிகையாக வருகிறார் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகளான சரஸ்வதி.
சமீபத்தில்தான் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கார்த்தியின் ஜோடியாக ஒரு படத்தில் அறிமுகமாகும் செய்தி வெளியாகி பரபரப்பானது. இந்த நிலைமையில் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதியும் தற்போது நடிக்க வருகிறாராம்.

சரஸ்வதி தனது தந்தை ராஜீவ் மேனன் கடைசியாக இயக்கியிருந்த ’சர்வம் தாள மயம்’ படத்தில் ஒரு நடனக் காட்சியில் நடனமாடியிருந்தார். இப்போது வசந்த் ரவி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்.
நடிகர் வசந்த் ரவி ‘தரமணி’ படத்தில் அறிமுகமானவர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘ராக்கி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளிவராமல் உள்ளது.