சென்ற வருடம் ரஜினியின் பிறந்த நாளுக்காக வீடியோ ஆல்பம் தயாரித்தவர் ராகவா லாரன்ஸ். அந்த ஆல்பம் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமல்ல அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து, அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நரேந்திர மோடியை வருங்கால இந்தியாவை திறம்பட ஆட்சி செய்யும் வல்லமை படைத்தவர் என்று பாராட்டி ‘மீண்டும் ஒரு சுதந்திரம்’ என்ற இசை வீடியோ ஆல்பத்தை உருவாக்குகிறார் ராகவா லாரன்ஸ்.
இந்த ஆல்பம் பற்றி பேசிய ராகவா லாரன்ஸ், “இந்த ஆல்பம் உருவாவதற்கு காரணமே, இதுவரை நமது இளைஞர்களுக்கு நாம் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டுமானால் ‘செருப்பு தைத்த ஆபிரகாம் லிங்கம் ஜனாதிபதியானதைப் பற்றி கூறுவது’தான் வழக்கமாக இருந்தது. டீ விற்ற இளைஞனும் பிரதமராக முடியும் என்று நிரூபித்த நரேந்திர மோடியை இனி சுட்டிக் காட்டும் அளவுக்குத் தன்னம்பிக்கை சிகரமாக விளங்குபவர் நரேந்திர மோடி. இதற்காகத்தான் இந்த இசை ஆல்பம்.
நான் எந்த ஒரு செயல்களை செய்தாலும் எனது குருநாதர் கே.பாலசந்தரிடம் ஆசி பெற்றுத்தான் செய்வது வழக்கம்.. இந்த இசை ஆல்பமும் கே.பி. சாரிடம் ஆசி பெற்றே ஆரம்பிக்கப் பட்டுள்ளது. விரைவில் இந்த இசை ஆல்பம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது..” என்றார்.
நம்ம ‘அம்மா’வைப் பத்தி ஏதும் வீடியோ ஆல்பம் வராதுங்களா ஸார்..?