உலகெங்கும் ஏராளமான எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கும் X -மென் days of future past திரைப்படம் wolverine மற்றும் x -மென் first class ஆகிய பிரம்மாண்டமான வெற்றி படங்களை தொடர்ந்து இந்த மாதம் மே 23-ம் தேதி ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது.
உலக அதிசயங்கள் ஏழு எப்படி பிரசித்தி பெற்று உள்ளதோ , அதை போலவே X -men வரிசை படங்கள் ஒவ்வொன்றுமே உலக அதிசயம்தான் . மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட கற்பனை வளத்துக்கும், இதுவரை கண்டிராத தொழில் நுட்ப அதிசயங்களின் கலவையின் அடுத்த கட்டம்தான் X -மென் days of the future past.
ஹக் ஜாக்மன் ஏழாவது முறையாக நீண்ட கொடிய நகங்களுடனும், பண்டை காலத்து மனிதனை நினைவுபடுத்தும் சிகை அலங்காரத்துடன் நடிக்கிறார்.
நொடியில் நிறம் மாறும், உருமாறும் தன்மை கொண்ட ரவேன் ஆக ஜெனிபர் லாரன்ஸ் நடித்து உள்ளார். சூப்பர் ஹீரோஸ் படங்களுக்கு என்று என்றுமே ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. comics வடிவத்திலும், தொடராகவும் எல்லோரையும் கவர்ந்த X -மென் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும் என்பதில் ஐயமே இல்லை .
3-டி படங்கள் பார்பதற்கு சரியான சாதனைகள் மட்டுமே அவசியம் இல்லை. அந்த காட்சி அமைப்புக்கு ஏற்ப பிரம்மாண்டமும் கதை களமும் அவசியம். அந்த வழியில் X -மென் எல்லோருடைய கவனத்தையும் தொழில் நுட்ப ரீதியிலும் கவரும். திரைப்படங்களில் தொழில் நுட்பம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் X -Men days of the future past இதுவரை வந்த படங்களில் மிகச் சிறந்த படமாக இருக்கும் என திரை உலக வல்லுனர்கள் கணிக்கின்றனர்.