சத்ரியன் – யதார்த்தமான கேங்ஸ்டர் கதை

சத்ரியன் – யதார்த்தமான கேங்ஸ்டர் கதை

சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனின் அடுத்த படம் “சத்ரியன்”. அப்படத்தில் விக்ரம்பிரபு நாயகனாகவும், மஞ்சிமா மோகன் நாயகியாகவும் நடிக்கின்றனர். நிறைய கேங்க்ஸ்டர் படங்கள் தமிழில் வந்திருந்தாலும், அவர்களின் வாழ்க்கையை அழுத்தமாகப் பதிவு பண்ண மெனக்கெட்டுள்ளார் பிரபாகரன். ட்ரெய்லரே அதற்குச் சாட்சி.

“தமிழ் சினிமா இதுநாள் வரை காட்டி வந்த கேங்க்ஸ்டராக படத்தின் நாயகன் குணா இருக்க மாட்டான். திரையில் விக்ரம் பிரபு எனும் நாயகன் கண்டிப்பாக தெரியமாட்டான். நம்ம ஊரோட தன்மை, கலாசாரம், பழக்கவழக்கம், வாழ்வியல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் சினிமாத்தனமற்ற குணாவாகவே விக்ரம் பிரபு வாழ்ந்துள்ளார்.

இந்தப் படம் நம்ம வாழ்வியலோட இணைஞ்ச ஆக்ஷன்றதால விக்ரம்பிரபுவை ஆக்ஷன் ஹீரோவா நம்ம மனசுல பதிய வைக்கிற படமா சத்ரியன் இருக்கும். படம் முழுக்கவே யதார்த்தம் மீறாத ஆக்ஷன் தான் பண்ணியிருக்கார்.

நான் இந்த படத்துக்கு ஏற்கனவே ஹீரோயினா இருக்குறவங்க வேண்டாம்னு முடிவு பண்ணி தேடினப்பதான் மஞ்சிமாமோகன் நடிச்ச ஒரு வடக்கன் செல்ஃபி’ பாத்தேன். அதுல அவங்க என் கதைக்கு தேவைப்படுற திருச்சி பெண் நிரஞ்சனவாக தெரிஞ்சாங்க. நான் அவங்கள மீட் பண்ற வரைக்கும் அவங்க வேற ஒரு தமிழ்படத்துல நடிக்கிறாங்கன்னு தெரியாது.

யுவனின் பாடல்களுக்குப் பாசிட்டிவான விமர்சனங்கள் வருது. பாடல்களை விட பின்னணி இசை தாக்கத்தை ஏற்படுத்தும்” என ‘சத்ரியன்’ படம் குறித்து விரிவாகப் பேசினார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

Our Score