பிரபுதேவாவின் “எங் மங் சங் “

பிரபுதேவாவின் “எங் மங் சங் “

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை த்தயாரித்து வருகிறார்கள்.

அந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும் “ எங் மங் சங் “ படத்தையும் தயாரிக்கிறார்கள். தேவி வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது. இந்தப் படத்தில் தங்கர்பச்சான் முக்கிய வேடம் ஏற்கிறார். இருவருடன் RJ பாலாஜி ,பாகுபலி பிரபாகர் காலகேயா , சித்ரா லட்சுமணன் கும்கி அஸ்வின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதாநாயகி மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஒளிப்பதிவு – ஆர்.பி.குருதேவ். இவர் காஞ்சனா 2, யோகி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர்.

இசை – அம்ரீஷ். இவர் விரைவில் வர உள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு இசையமைத்துள்ளார்

கலை – ராஜன்.D

தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.பி.பாலகோபி

தயாரிப்பு – கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்,

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.எஸ்.அர்ஜுன். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை போன்ற படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

படப்பிடிப்பு இம்மாதம் துவங்க உள்ளது.

Our Score