Masala Pix நிறுவனம் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர்.கண்ணன் Focus Films நிறுவனத்துடன் இணைந்து தனது 7-வது படத்தை தயாரித்து இயக்கவுள்ளார்.
‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘சேட்டை’, ’இவன் தந்திரன்’, போன்று எல்லா வகை கதைகளையும் இயக்கம் செய்து அனைவருக்கும் பிடிக்கும் தரமான வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து தந்து கொண்டிருப்பவர் இயக்குநர் R.கண்ணன்.
தற்போது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார். இந்தப் படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார்.
இதை அடுத்து, மிர்ச்சி சிவா, யோகிபாபு, கருணாகரன், பிரியா ஆனந்த் நடிக்கும் ‘காசேதான் கடவுளடா’ படத்தையும் இயக்கம் செய்துள்ளார்.
அடுத்ததாக, குடும்பத்துடன் அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் சயின்ஸ் பிக்சன், ஃபேண்டஸியில் காமெடி ஹாரர் கலந்த படத்தை ஒரு படத்தைத் தயாரித்து இயக்கவுள்ளார்.
இப்படத்தில் நாயகியாக ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நேத்ரா எனும் இளம் அறிவியல் விஞ்ஞானி கதாப்பாத்திரத்தில் ஹன்சிகா நடிக்கிறார்.
இப்படத்திற்காக சென்னை ECR-ல் ஒரு பிரம்மாண்டமான சயின்ஸ் லேப் ஒன்றை பெரும் பொருட்செலவில் அமைத்திருக்கிறார்கள். இப்படத்திற்காக, தலை சிறந்த அனிமேஷன் கம்பெனியுடன் இணைகிறார் ஆர்.கண்ணன்.
இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் செய்கிறார். வசனத்தை சித்தார்த் சுபா வெங்கட் எழுதுகிறார். கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். மக்கள் தொடர்பு – ஜான்சன்.
படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் துவங்கியது.
தமிழ் சினிமாவுக்கு இந்தப் படம் புதியதாகவும், ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாகவும் இருக்கும். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது.