‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தின் தற்போதைய நிலை பற்றி இயக்குநர் பாண்டிராஜ், சற்று நேரத்திற்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தி இது:
‘இது நம்ம ஆளு’ படத்தில் என்னுடைய தரப்பில் இருந்து படத்தொகுப்பு உட்பட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டேன். ஒரு பாடல் காட்சி மட்டும் ஷூட் செய்யப்படவில்லை. டிரெயிலரும் தயாராகவே உள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பும், பட வெளியீட்டு தேதி அறிவிப்பும் என் கையில் இல்லை. இருந்தாலும், இசை வெளியீட்டு விழா நவம்பர் மாதமும், படத்தின் வெளியீடு டிசம்பரிலும் இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். இதை தயாரிப்பாளர்தான் முடிவு செய்ய வேண்டும்..” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
வீம்பு பிடிக்காமல் அந்த ஒரு பாடலை தூக்கிக் கடாசிட்டு சீக்கிரம் கொண்டாங்கப்பா.. நீங்க கொண்டு வர்றதுக்குள்ள இங்க நயன்தாராவுக்கு புள்ளையே பொறந்திரப் போவுது. அப்புறம் எல்லாமே வீணாப் போயிரும்..!