லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்தப் படம் ‘அம்மிணி’

லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்தப் படம் ‘அம்மிணி’

பிரபல நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் இயக்கத்தில் உருவாகும் ‘அம்மிணி’ படத்தின் பூஜை, சென்னையில் இன்று எளிமையாக நடைபெற்றது.

‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படங்களுக்கு பின்பு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் மூன்றாவது திரைப்படம் இது.

Tag Entertainment [P] ltd நிறுவனத்தின் சார்பில் வெண் கோவிந்தா தயாரிக்கும் இந்த ‘அம்மிணி’ திரைப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச் மாதம் துவங்க உள்ளது.

இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ‘அம்மிணி’ திரைப்படத்தைப் பற்றிப் பேசும்போது, “நான் அண்மையில் சந்தித்த ஒரு பெண்மணியை பற்றிய கதை இது. அவரும், அவரது வாழ்வு இலக்கியமும் என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்க்கை என்றால் என்ன என்பதை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை; புரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. பொருள் ஆதாரத்தை தாண்டிய வாழ்க்கை ஒன்றும் உண்டு என்பதை நான் அவரிடம்தான் உணர்ந்தேன். அந்த யதார்த்த வாழ்க்கையைத்தான் இத்திரைப்படத்தில் சொல்ல இருக்கிறேன். 

அந்த பெண்மணிதான் இந்தப் படத்தில் ‘அம்மிணி’ கதாபாத்திரமாக வருகிறார். இவருடன் மேலும் பல கதாபாத்திரங்கள் மூலமும் சுவாரசியமான சம்பவங்கள் மூலமாகவும் படத்துக்கு வலு சேர்த்து இருக்கிறேன். கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிக நடிகையர் தேர்வு நடை பெற்று வருகிறது.

இந்தப் படத்தில் வெவ்வேறு துறைகளில் உள்ள வல்லுனர்களை தொழில் நுட்ப கலைஞர்களாக ஒப்பந்தம் செய்ய உள்ளோம். என் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் இருக்க வேண்டும் என விழைபவள் நான். அந்த வகையில் இந்த படத்திலும் என் தனியான முத்திரை பதிந்திருக்கும்..” என்று வெற்றி பெரும் தீர்க்கத்தை கண்களில் வெளிக்காட்டி தெரிவிக்கிறார்.

Our Score