எழுத்தாளர் கவுதம சித்தார்த்தனின் ‘உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்’ புத்தக வெளியீடு..!

எழுத்தாளர் கவுதம சித்தார்த்தனின் ‘உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்’ புத்தக வெளியீடு..!

தமிழ்த் திரைப்பட விமர்சகர்களில் குறிப்பிடத்தக்கவர் எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன்.

தமிழ் திரைப்பட விமர்சனங்களில் இவர் ஒரு புதிய பாணியைக் கையாள்கிறார். மேலோட்டமாக ‘இந்த நடிகர் இந்த இடத்தில் இப்படி நன்றாக நடித்திருக்கிறார்’.’வசனங்கள் நன்றாக இருக்கின்றன’ என்பது போன்ற விமர்சன வகை அல்ல இது.

திரைப்படத்திற்குப் பின்னாலுள்ள அரசியலை நுட்பங்களை மாற்றுப் பார்வையை முன்வைக்கிறது இந்நூல். நமது தமிழ் படங்களை எடுத்துக் கொண்டு சர்வதேச அளவில் வெளியாகின்ற படங்களின் அரசியலோடு, பண்பாட்டோடு, தொழில் நுட்பங்களோடு, மாற்றுப் பார்வைகளோடு பொருத்தி தமிழ்த் திரை மொழியை உலக அளவிற்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார் எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன்.

தற்போது நடைபெற்றுவரும் சென்னை புத்தகக் காட்சியில் நூல் வெளியிடும் நிகழ்வுகள் பெருமளவில் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் எழுதிய 6 நூல்களை எதிர் வெளியீடு வெளியிட்டிருக்கிறது.

தினந்தோறும் மாலை 7.00 மணியளவில் நடக்கும் புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு எழுத்தாளப் பெருமக்களும், சிந்தனையாளர்களும், பத்திரிகையாளர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

நேற்று கௌதம சித்தார்த்தன் எழுதிய ‘உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்’ என்ற ​​நூல் வெளியீட்டு நிகழ்வு புத்தகக் கண்காட்சியில் சிறப்பாக நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல் பிரதியை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார் ‘மீகாமன்’ திரைப்பட இயக்குநர் மகிழ் திருமேனி. முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசினார் ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்பட இயக்குநர், வேல்ராஜ்.

மேலும் ‘குற்றம் கடிதல்’ திரைப்பட இயக்குனர், பிரம்மா, ‘சூது கவ்வும்’ திரைப்பட கதை வசனகர்த்தா ஸ்ரீநிவாசன் கவிநயம், மற்றும் திரையுலக ஆளுமைகள், பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

Our Score