full screen background image

‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தருக்கு சிலை..! – வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் தகவல்

‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தருக்கு சிலை..! – வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் தகவல்

‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம், கே.பி-யின் 9-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியை, இன்றைக்கு நலத்திட்ட உதவிகளுடன் நடத்தினார்கள்.

தி.நகர் தக்கர் பாபா கலையரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், தொழிலதிபர் வி.ஜி.பி.சந்தோஷம், இயக்குநர் சரண், நடிகர்கள் பூ விலங்கு மோகன், ரமேஷ் கண்ணா, தாசரதி, மாஸ்டர் பிரபாகரன், சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் சிவன் சீனிவாசன், பாரதிராஜா மருத்துவமனை பிரேம் குமார், வழக்கறிஞர் ஜெகநாதன், நடன இயக்குநர் கிரிஜா ரகுராம் ஆகியோர் கலந்து கொண்டனர்!

இந்த நிகழ்ச்சியில் பூச்சி முருகன் பேசுகையில், “ரஜினி, கமல், மம்மூட்டி போன்ற முக்கிய நடிகர்களின் கடிதத்தோடு, பாலசந்தருக்கு சிலை வைக்கும் கோரிக்கையை, கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்க பொதுச் செயலாளர் பாபு கொடுத்த கடிதம் தற்போது அரசின் பரிசீலனை முடிவில் இருக்கிறது. விரைவில் நல்ல செய்தி வரும்..” என்றார்!

இயக்குநர் சரண் பேசுகையில், “கே.பாலசந்தர் வாழ்ந்த வாரண் சாலைக்கு ‘பாலசந்தர் சாலை’ என்று பெயர் வைக்க வேண்டும்” என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்!

கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க பொதுச் செயலாளர் கவிதாலயா வீ.பாபு, பொருளாளர் முகமது இலியாஸ், இணைச் செயலாளர்கள் கவிதாலயா பழனி, கண்ணப்பன், விக்ரமன் ஆகியோர் நிகழ்ச்சியை நடத்தினார்கள்..!

திரைப்படம் மற்றும் சின்னத்திரையை சேர்ந்த நடிகர்கள் 6,000 பேருக்கு இலவசமாக மருத்துவ அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மார்னிங் ஸ்டார், சேரிடபுள் ட்ரஸ்ட் மற்றும் லைஃப் கிரீன் சித்த மருத்துவமனை ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் லைப் கீரின் சித்த மருத்துவமனையின் மருத்துவர்கள் கலந்து கொண்டு, இலவச மருத்துவ ஆலோசனைகள் அளித்தனர்.

?????????????????????????????????????????????????????????

Our Score