“செய்யப் போகும் சம்பவம் தரமா இருக்கும்” – இயக்குநர் ஹெச்.வினோத் சொன்ன ‘வலிமை’ அப்டேட்

“செய்யப் போகும் சம்பவம் தரமா இருக்கும்” – இயக்குநர் ஹெச்.வினோத் சொன்ன ‘வலிமை’ அப்டேட்

“வலிமை’ அப்டேட் பற்றி மூச்சுவிடாமல் இருக்கிறீர்களே..?” என்று தயாரிப்பாளர் போனி கபூரையும், இயக்குநர் ஹெச்.வினோத்தையும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறார்கள் இணையத்தில் இருக்கும் அஜீத்தின் ரசிகர்கள்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ‘வலிமை’ படத்தின் பாடல்கள் பற்றிய செய்தியை ‘மாநாடு’ படத்தின் டிஸ்கஷன்போது கசியவிட.. இன்னும் அதிகமாக கோபமாகிவிட்டார்கள் ரசிகர்கள்.

“தயாரிப்பாளரும், இயக்குநரும் சொல்ல வேண்டியதை இசையமைப்பாளர் சொல்றாரு.. நீங்களும் இருக்கீங்களே..?” என்னும் ரேன்ச்சுக்கு இயக்குநரையும், தயாரிப்பாளரையும் செல்லமாகக் கோபித்துக் கொண்டார்கள்.

இதனால் இப்போது தனது டிவீட்டர் பக்கத்தில் படத்தின் இயக்குநரான ஹெச்.வினோத் ஒரு செய்தியைப் பதிவிட்டிருக்கிறா்.

அந்தச் செய்தியில், “கோடம்பாக்கத்தில் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘வலிமை’யின் கொண்டாட்டம் விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படம் பற்றிய மற்றைய செய்திகளை மிக விரைவில் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பார். அந்தச் சம்பவம் தரமா இருக்கும்.. கவலை வேண்டாம்..” என்று எழுதியிருக்கிறார்.

ஏதோ நல்லதா.. சீக்கிரமா கொடுத்தீங்கன்னா சந்தோஷம்ங்கோ..!

Our Score