கதிர் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் ‘சத்ரு’ ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்ட்டெர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் தரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு.’
இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த ‘லகுபரன்’ இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, இசை – அம்ரிஷ், பாடல்கள் – கபிலன், மதன் கார்க்கி, சொற்கோ, படத் தொகுப்பு – பிரசன்னா.ஜி.கே., கலை இயக்கம் – ராஜா மோகன், சண்டை இயக்கம் – விக்கி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நஞ்சுண்டான்.
24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்த படத்தின் கதை. ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் MOTION போஸ்டரை சமீபத்தில் இயக்குநர் கெளதம்வாசுதேவ் மேனன் வெளியிட்டார். படம் விரைவில் வெளியாக உள்ளது.










