full screen background image

ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து, இயக்கி வரும் இயக்குநர் ஜி.சிவா..!

ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து, இயக்கி வரும் இயக்குநர் ஜி.சிவா..!

அர்த்தனாரீஸ்வரா மீடியா ஒர்க்ஸ் மற்றும் சாய் பாபா பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் திரைப்படங்கள் ‘அமானுஷ்ய கதைகள்’ & ‘போற போக்குல மூணு காதல்’.

இத்திரைப்படங்களை நடிகர் ஜி.சிவா கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் “விருகம்”, “ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா” ஆகிய படங்களை இயக்கி நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் “ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா” திரைப்படம் ASIAN INTERNATIONAL FESTIVAL, மற்றும் REELS INTERNATIONAL FESTIVAL-ல் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநர் விருதினை வென்றது.

தனது புதிய படங்கள் குறித்து இயக்குநர் ஜி.சிவா கூறுகையில், “என்னுடைய அடுத்தடுத்த படங்களான ‘போற போக்குல மூணு காதல்’, ‘அமானுஷ்ய கதைகள்’ இரண்டுமே வெவ்வேறு விதமான பேய் படங்களாக வளர்ந்து வருகிறது. விரைவில் இந்தப் படங்களின் இசை மற்றும் ட்ரைலர் வெளியாகும்…” என்றார்.

‘அமானுஷ்ய கதைள்’ படத்தில் காவேரி, ரேகா, பல்லவி, மீனா கௌடா, மற்றும் ‘KGF’, ‘காந்தாரா’ ஆகிய படங்களில் நடித்த ‘உக்ரம் ரவி’ மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த இரண்டு படங்களுமே புதுவிதமான பேய் படங்களாக ரசிகர்களுக்கு இருக்குமாம்.

இவ்வாண்டின் இறுதிக்குள் இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாகும் என்கிறது படக் குழு.

Our Score